Labels

rp

Blogging Tips 2017

புதிதாக சேர்ந்துள்ள 27 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இன்று முதல் வழங்கப்படும்


புதிதாக சேர்ந்துள்ள 27 லட்சம் வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இன்று முதல் வழங்கப்படும். இதை தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று கூறினார். சென்னை தலைமை செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களி டம் நேற்று கூறியதாவது: இன்று நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களு டன் இணைந்து பேரணி, மினிமராத்தான் ஓட்டம், மனித சங்கிலி, வீதி நாடகங்கள், கோலப்போட்டி, பலூன்கள் மூலம் விளம்பரங்கள் செய்து வாக்களிப்பதின் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

முதன்முறையாக, தமிழக தேர்தல் அலுவலகம் சார்பில் இணையதளம் மூலம் ‘பேஸ்புக் அக்கவுண்ட்’ இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக ‘யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல்’ மற்றும் ‘போரம் பார் எலக்டோரல் இன்டக்ரிடி‘ என்ற 2 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 60,418 வாக்குப்பதிவு மையங்களில் உள்ள 27,946 வாக்குச்சாவடிகளில் இந்தாண்டு புதிதாக சேர்ந்துள்ள 27 லட்சம் வாக்காளர்களுக்கு இன்று முதல் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். மையங்களுக்கு வந்து வாக்காளர் அடை யாள அட்டை பெறாதவர்களுக்கு, வாக்குச்சாவடி மைய அதிகாரிகள் வீடு, வீடாக சென்று அடையாள அட்டையை ஒரு மாதத்திற்குள் வழங்குவார்கள்.



இதில் விடுபட்டவர்களுக்கு பொதுவான இடத்தில் மையம் ஏற்படுத்தப்பட்டு மார்ச் மாதம் முதல் வாக்காளர் அடை யாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இணையதளத்திலும், புதிய அட்டை பெறாதவர்கள் விவரம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பிரவீன்குமார் கூறினார். பேட்டியின்போது இணை தேர்தல் அதிகாரி சிவஞானம், யூத் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மேனேஜிங் டிரஸ்டி நிஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a comment