Labels

rp

Blogging Tips 2017

4 40 கோடி வங்கி வாடிக்கையாளரில் 6.7 கோடி பேருக்கு மட்டுமே மொபைல் பேங்கிங் வசதி0 கோடி வங்கி வாடிக்கையாளரில் 6.7 கோடி பேருக்கு மட்டுமே மொபைல் பேங்கிங் வசதி

நாடு முழுவதும் சுமார் 40 கோடி பேருக்கு வங்கி கணக்கு உள்ளது. ஆனால், இவர்களில் 6.7 கோடி பேர் மட்டுமே, மொபைல் வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர் என  நேஷனல் பேமன்ட் கார்ப்பொரேஷன் தெரிவித்துள்ளது.நிதி மற்றும் பண பரிவர்த்தனை குறித்த கருத்தரங்கம் மும்பையில் நேற்று நடந்தது.இதில் தேசிய பண பரிவர்த்தனை கழக நிர்வாக இயக்குனர் அபய் பி.ஹோதா பேசியதாவது:வங்கி கணக்கில் பணம் எடுக்கப்படுவது மற்றும் இதர வர்த்தக செயல்பாடுகள் குறித்து வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் தரவேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயம் ஆக்கியுள்ளது. வங்கி சேவையை பாதுகாப்பானதாக்கவும், சேவையை இன்னும் சிறப்பாக அளிக்கவும் இந்த வசதி பயன்படும்.

தற்போது நாடு முழுவதும் சுமார் 90 கோடி மொபைல் போன் இணைப்புகள் உள்ளன. ஆனால் இவற்றில், சுமார் 50 கோடி முதல் 60 கோடி மொபைல் இணைப்புகள்தான் உபயோகத்தில் உள்ளன. இவர்களில் சுமார் 40 கோடி பேருக்கு வங்கி கணக்கு உள்ளது. ஆனால், இவர்களில்  6.7 கோடி பேர் மட்டுமே, மொபைல் வங்கி சேவையை பயன்படுத்துகின்றனர். வங்கி சேவையை பயன்படுத்துவதற்கான மொபைல் அப்களை அந்தந்த மாநில மொழிகளில் ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மொபைல் மூலம் பயன்படுத்தப்படும் வங்கி சேவையை எளிமையாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி செயல் இயக்குனர் ஜி.பத்மநாபனும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment