Thursday, 16 January 2014

வாசிப்புத் திறன் - பள்ளிக் குழந்தைகளின் அவலநிலை குறித்த ஆய்வு

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், 3 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளில், பாதிபேர் மட்டுமே 1ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தை படிக்கும் திறன் பெற்றுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதேபோல், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில் 31% பேர் மட்டுமே, பகுப்பு(division) செயல்பாட்டு திறனைப் பெற்றுள்ளனர் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: முதல் வகுப்பில் படிக்கும் 53.4% குழந்தைகளுக்கு, தங்களின் தாய்மொழி எழுத்துக்களை கண்டறிய முடியவில்லை. அவற்றில் 34.2% குழந்தைகள் மட்டுமே அந்த திறனைப் பெற்றுள்ளனர்.
10.3% குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளைப் படிக்க முடிகிறது மற்றும் 2%க்கும் குறைவான குழந்தைகளுக்கு மட்டுமே தங்களின் பாடப் புத்தகங்களைப் படிக்க முடிகிறது. இவ்வாறு பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats