Labels

rp

Blogging Tips 2017

தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை மீண்டும் துவக்க மனு

நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை மீண்டும் துவக்க வலியுறுத்த தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டி.டி.சி.,
எனும் தொழில் ஆசிரியர் சான்றிதழ் பயிற்சியை மீண்டும் துவக்க வேண்டும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் உடற்கல்வி ஆய்வாளர், பணியிடம் இருப்பதை போல் சிறந்த கலை ஆசிரியர்கள் மற்றும் சென்னை கவின் கலைக்கல்லூரியில் பயிற்சி முடித்த பட்டதாரிகளுக்கும், ஓவியத்துறை ஆய்வாளர் பணியிடம் புதிதாக ஏற்படுத்தி தர வேண்டும்.
கூடுதலாக, ஒவ்வொரு அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், உடற்கல்வி இயக்குநர் பணியிடம் இருப்பதை போல் "டிசைன் ஜியோமெட்ரிக்கல், பெயிண்டிங், மாடலிங்" என அரசால் நடத்தப்படும், தொழில்நுட்பத் தேர்வுகளை கூடுதலாக முடித்த கலை ஆசிரியர்களுக்கும், ஓவிய இயக்குநர் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு, மனுவில், கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment