நாமக்கல் அருகே, பள்ளி மாணவியை, பாலியல்
பலாத்காரம் செய்த ஆசிரியரை, போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம்,
வெண்ணந்தூர் அடுத்த சப்பையாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி சமூக அறிவியல்
ஆசிரியர் அருண்குமார், 27. அவர், கடந்த டிசம்பர் மாதம், ஒன்பதாம் வகுப்பு
படிக்கும் மாணவர் மற்றும் மாணவியை அழைத்துக் கொண்டு, நாமக்கல் தனியார்
கல்லூரியில் நடந்த கருத்தரங்குக்குச் சென்றார்.
கருத்தரங்கு முடிந்தவுடன், மாணவரை பள்ளிக்கு
அனுப்பி விட்டு, மாணவியை, கொசவம்பட்டியில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்
சென்றார். அங்கே, ஆசை வார்த்தை கூறி, மாணவியை பாலியல் பலாத்காரம்
செய்தார். அதிர்ச்சியடைந்த மாணவி, இரண்டு மாதங்களாக, பள்ளிக்கு ஒழுங்காக
செல்லாமல், அடிக்கடி விடுப்பு எடுத்து வந்தார். சந்தேகமடைந்த பெற்றோர்,
மகளிடம் விசாரித்த போது, ஆசிரியர் அருண்குமார், பாலியல் பலாத்காரம் செய்தது
தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், தலைமை ஆசிரியை அனுசியாவிடம்
புகார் தெரிவித்தனர். இருப்பினும், ஆசிரியர் அருண்குமார் மீது நடவடிக்கை
எடுக்காமல், அவருக்கு ஆதரவாக பேசி வந்தார் தலைமை ஆசிரியை. அதனால், மாவட்ட
குழந்தைகள் நல குழுமத்தில், மாணவியின் பெற்றோர், புகார் செய்தனர். குழுமத்
தலைவர் சிவகாமிவள்ளி, உறுப்பினர்கள் சதீஷ்பாபு, ஜெயபால் ஆகியோர், நேற்று
பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் அருண்குமார் மற்றும் தலைமையசிரியை அனுசியா
ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதையறிந்த பெற்றோர், உறவினருடன்
பள்ளியை முற்றுகையிட்டனர்.
குழந்தைகள் நல குழுமத்தினர், ஆசிரியர்
அருண்குமாரை, வெண்ணந்தூர் போலீஸில் ஒப்படைக்க, பள்ளியை விட்டு வெளியே
அழைத்து வந்தனர். ஆவேசமடைந்த பெற்றோர் சரமாரியாக தாக்கினர். குழுமத்தினர்,
அவர்களிடம் இருந்து, ஆசிரியரை விடுவித்து, வெண்ணந்தூர் போலீஸ் ஸ்டேஷனில்
ஒப்படைத்தனர்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்கு பதிவு
செய்து, ஆசிரியர் அருண்குமாரை கைது செய்தார். விசாரணையில், 2009ம் ஆண்டு,
ஒரு பெண்ணை ரகசியமாக பதிவு திருமணம் செய்து கொண்டதும், 2013ம் ஆண்டு,
பெற்றோர் சம்மதத்துடன் அதே பெண்ணை முறையாக திருமணம் செய்து கொண்டதும் தெரிய
வந்தது.
No comments:
Post a comment