Labels

rp

Blogging Tips 2017

கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழா இந்தியாவின் உயர்கல்வி சதவீதம் குறைவு ஜனாதிபதி பிரணாப் பேச்சு

இந்தியாவின் உயர் கல்வி சதவீதம் குறைவாக உள்ளது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இந்திய கடல்சார் பல்கலைக் கழக வேந்தர் வி.கிருஷ்ணமூர்த்தி, பல்கலைக் கழக துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மும்பை, சென்னை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள கடல்சார் கல்வி மையங்களில் இளம்கலை மற்றும் முதுகலை பட்டம் படித்த ராதாகிருஷ்ணன், ரியாஸ் அகமது உட்பட 1339 பேருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பட்டங்களை வழங்கினார்
.

விழாவில் அவர்  பேசியதாவது: இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழாவில் கடல்சார் பொறியியல், கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் பொறியியல் போன்ற பல்வேறு பிரிவுகளில் பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த 1926ம் ஆண்டு இந்தியாவில் கடல்சார் படிப்பு தேவை என்பதற்காக இந்திய கடல்சார் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்தவுடன் 1947ல் மும்பையிலும், 1953ல் கொல்கொத்தாவிலும் கடல்சார் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்த கல்வி நிறுவனங்களில் மிகச்சிறந்த வகையில் கல்வி தரப்படுகிறது. ஏராளமானோர் இந்த கல்வி மையங்கள் மூலம் இந்தியா மட்டுமல்லாமல் வெளி நாட்டு  கப்பல் நிறுவனங்களில் பணியில் சேர்ந்துள்ளனர். கடந்த 1991ல் விசாகப்பட்டினத்தில் தேசிய கடல் வடிவமைப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. 1965ல் துறைமுக நிர்வாக கல்வி மையமும், 1985ல் தேசிய கடல்சார் அகாடமியும் ஆரம்பிக்கப்பட்டன. 1948ல் லால் பகதூர் சாஸ்திரி கடல்சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தியாவில் 7500 கிலோமீட்டம் தூரம் கடல்பகுதி உள்ளது. அதனால், இந்திய வணிபத்தில் 95 சதவீதம் கடல்சார் வாணிபமாகும். இதில் 70 சதவீதம் கடல்மூலமே கையாளப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கடல் வாணிபத்தில் நாம் 6 சதவீதமே உள்ளோம். வரும்காலத்தில் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் நாடாக மாறும் சூழ்நிலை வந்தால் அப்போது, கப்பல் கட்டுமானத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி மிகவும் அவசியம். கப்பல் தயாரிக்கும் பணியும் முக்கிய இடத்தை வகிப்பதால் அதற்கான பயிற்சிகளும் மிகவும் அவசியமானதாக கருதப்பட்டு அதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் தரம்வாய்ந்தவர்களாக இருக்கும் வகையில் இந்த பல்கலைக் கழகத்தில் தரமான கல்வி தரப்படுகிறது.

இருந்த போதிலும் கப்பல் சிப்பந்திகளின் எண்ணிக்கை உலக அளவில் 6 சதவீதமாகவே உள்ளது. வரும் 2015ல் இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பல் சிப்பந்திகள் பணிக்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் வரவேண்டும். இருந்தபோதிலும் இந்தியாவின் உயர்கல்வி உலக அளவில் மிகவும் குறைவாகவே உள்ளது. உயர் கல்வியில் ஜெர்மனி 21 சதவீதத்தையும், அமெரிக்கா 37 சதவீதத்தையும் பெற்றுள்ளது. ஆனால், இந்தியா 6 சதவீதத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. இந்த சதவீதத்தை உயர்த்த வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். உங்களின் பணி இந்த பல்கலைக்கழகத்துக் கும், சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் பயன்பட வேண்டும் என்பதை மறந்துவி டக்கூடாது. இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

No comments:

Post a comment