Friday, 7 March 2014

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இறுதி வாய்ப்பு! மாவட்டம் முழுவதும் வரும் 9ல் முகாம்

வரும் லோக்சபா தேர்தலில், ஜனநாயக கடமையாற்றும் வகையில், வாக்காளர்கள், தங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் வகையில், வரும் 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று, தங்களது பெயர் பட்டியலில் இருக்கிறதா, முகவரி சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் விடுபட்டிருந்தால், படிவம் 6 பூர்த்தி செய்து கொடுத்து, வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில் ஏப்., 24ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்து வதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் படுமும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கடந்த ஜன., 10ல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. திருப்பூரில் மாவட்டத்தில், 9,47,727 ஆண், 9,27,610 பெண், 85 திருநங்கையர் என மொத்தம் 18,75,422 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதியில், 6,79,185 ஆண்; 6,59,332 பெண் மற்றும் 51 திருநங்கைகள் என மொத்தம், 13,38,568 வாக்காளர்கள் உள்ளனர்.
இப்பட்டியலில் விடுபட்டோர், புதிய வாக்காளராக பெயர் சேர்க்க விரும்புவோர், பட்டியலில் ஏற்கனவே பெயர் இருந்தும் தவறாக இருந்தாலோ அல்லது முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 9ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட அளவில் மொத்தம் 961 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், அந்தந்த ஓட்டுச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்து, காலை 8.00 முதல் மாலை 5.00 மணி வரை அலுவலர்கள் பணியில் இருப்பர். பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், சிறு திருத்தங்கள் மேற்கொள்ளுதல் உள் ளிட்ட அனைத்துக்கும் படிவங்கள் வழங் கப்படும். அவற்றை உடனடியாக பூர்த்தி செய்து பெற்றுக்கொள்வர். வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள், அதற்கான ஆவணங்களை காட்டி, அடை யாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் அல்லது விண்ணப்பம் செய்யலாம். ஒவ்வொரு வாக்காளரும், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில், வரும் லோக்சபா தேர்தலில் ஓட்டை பதிவு செய்ய முன்னேற்பாடாக, பட்டியலில் இப்போதே சரி பார்த்துக் கொள்ள வேண்டும். விடுபட்டிருந்தால் பெயரை சேர்க்கும் பணியையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம் ஆர்.டி.ஓ., தாராபுரம் தொகுதிக்கும், திருப்பூர் ஆர்.டி.ஓ., திருப்பூர் வடக்கு தொகுதிக்கும், உடுமலை ஆர்.டி.ஓ., உடுமலை தொகுதிக்கும், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் காங்கயம் தொகுதிக்கும், உதவி கமிஷனர் (கலால்) அவிநாசி தொகுதிக்கும், மாநகராட்சி கமிஷனர் திருப்பூர் தெற்கு தொகுதிக்கும், மாவட்ட வழங்கல் அலுவலர் பல்லடம் தொகுதிக்கும், ஆதிதிரா
விடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் மடத்துக்குளம் தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் சார்பில் விரைவில் மொபைல் எண் வழங்கப்படும். மொபைல் எண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், பொது
மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats