Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

நான்கு புதிய வாயுக்களால் ஓசோன் படலம் பாதிப்பு:ஆய்வில் தகவல்

நான்கு புதிய வாயுக்கள் ஓசோனை பாதித்து வருவதாக . கிழக்கு அங்கோலியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் அறியப்பட்டுள்ளது.பூமியின் பாதுகாப்பு அடுக்கான ஓசோன் படலம் இன்று பல்வேறு வாயுக்களால் பாதித்து கொண்டே வருகிறது.
புற்றுநோயை காப்பாற்ற ஒசோன் முக்கிய பங்கு:கடல் மட்டத்திலிருந்து 20 கி.மீ., முதல் 50 கி.மீ., வரை உள்ள அடுக்கு வாயு மண்டலத்தில் தான் ஓசோன் உள்ளது.புறஊதாக்கதிர் பாதிப்பை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புறஊதாக்கதிர் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தனாவை.



1985ல் கண்டுபிடிப்பு:



பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு குழுவினர் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை 1985 ஆம் ஆண்டில் முதல் முறையாக கண்டுபிடித்தனர். இந்த பாதிப்புக்கு காரணம் சி.எப்.சி. வாயுக்கள்தான் என்பது அப்போது கண்டறியப்பட்டது.இதையடுத்து ஓசோனைக் காக்க 1987, செப்.,16ல் கனடாவில் உள்ள மான்ட்ரீல் நகரில் "மான்ட்ரியல் ஒப்பந்தம்" எனும் உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி, ஓசோன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, செப்.,16ல் "சர்வதேச ஓசோன் பாதுகாப்பு தினம்" கடைப்பிடிக்கப்படுகிறது.
1920களில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வாயுக்கள் குளிர்சாதனப்பெட்டி, வாசனைத் திரவியங்கள் உற்பத்திக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சி.எப்.சி. வாயுக்களை கட்டுப்படுத்த சர்வதேச அளவில் கருத்தொற்றுமை உருவானது. இதன்மூலம் 1987 ஆம் ஆண்டு முதல் இந்த வாயுக்களை வெளிப்படுத்துவது கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த 2010ல் அதற்கு தடையும் விதிக்கப்பட்டது.
ஓசோன் அளவு குறைந்தால் பூமியின் வெப்பம் உயரும். ஓசோன் படலத்தில் ஏற்படும் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
அபாயம் இல்லை:



இதில் மூன்று வாயுக்கள் சி.எப்.சி. வாயுக்கள். மற்றவை ஹைட்ரோ குளோரோ கார்பனாகும். இவை ஓசோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவையாகும்.இருந்தாலும் சிறிய அளவிலேயே இந்த வாயுக்கள் வெயேற்றவதாகவும் இவை தற்போதைய நிலையில் அபாயம் இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment


web stats

web stats