Friday, 4 April 2014

சிலியில் மீண்டும் நிலநடுக்கம். மின்சாரம் இன்றி 40,000 பொதுமக்கள் தவிப்பு.



தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு சிலி மக்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தை பயன்படுத்தி ஜெயிலில் இருந்து தப்பித்த 300 பெண் கைதிகளில் 100 பேர் வரை பிடிபட்டுவிட்டதாகவும், எஞ்சியவர்களை கண்டுபிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சிலி போலீஸார் தெரிவித்தனர்.
சிலியில் உள்ள Iquique நகரில் இன்று மீண்டும் 7.6 அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிபர் Michelle Bachelet, பாதிப்பு அடைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை கவனித்து வருகிறார். Iquique என்ற நகரின் அருகேயுள்ள Alto Hospicio, என்ற பகுதியில் சுமார் 2000 வீடுகள் இடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடலோரப்பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகள் பல மூழ்கிவிட்டதாகவும், ஒருசில படகுகள் கடுமையாக பாதிப்பு அடைந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சுமார் 40,000 பேர் வரை மின்சாரம் இன்றி தவித்து வருவதாக Ricardo Toro of Chile's National Emergency Office தெரிவித்துள்ளது. மேலும் சுனாமி எந்த நேரத்திலும் வரலாம் என்ற எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளதால் கடலோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

5/9/13-மாவட்டகோரிக்கை முழக்க காட்சிகள்


web stats

web stats