Labels

rp

Blogging Tips 2017

அடிப்படை பணியாளர்கள் இல்லை - மாணவர்களே பணியாளர் ஆகும் அவலம்

மாநிலம் முழுவதும் செயல்படும்ஆரம்பப்பள்ளிகளில், 90 சதவீத அடிப்படைப் பணியாளர்கள் பணியிடம் காலியாகவுள்ளதால்,பல்வேறு இடங்களில், பள்ளி மாணவர்கள் பணியாளர்களாகும் அவலம் தொடர்ந்து வருகிறது.
தமிழகத்தில் 35 ஆயிரத்து 182 ஆரம்பப் பள்ளிகள்செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் 32.2லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில்1.4 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 90சதவீத பள்ளிகளில் துப்புரவு பணியிடங்கள்இல்லாததால், ஆசிரியர்களும், மாணவர்களும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகும் நிலைஏற்படுகிறது.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில்இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. பின், ஓய்வுபெறும் பணியாளர்களின் பணியிடங்கள்நிரப்பாமல் விடப்பட்டு, தற்போது காலிப்பணியிடங்கள் 90 சதவீதமாக அதிகரித்துள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் வாயிலாக அடிப்படைப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடுநிலைப் பள்ளிகளில், சமீபத்தில் கோர்ட்உத்தரவின்படி, 40 சதவீத பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். மீதம் உள்ள பள்ளிகளின்நிலை கேள்விக்குறியாக விடப்பட்டுள்ளது.

 பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதுபோல்,அடிப்படை பணியாளர்களையும் நியமிப்பது அவசியம். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை ஒப்பிடுகையில், ஆரம்பப்பள்ளி மாணவர்கள்பயிலும் இடங்களில் கட்டாயம் அடிப்படை பணியாளர்கள் அவசியம்.
பல இடங்களில், மாணவர்கள் வகுப்பறைகள்,பள்ளிகளை சுத்தம் செய்வதாக புகார் எழுவதற்கு, பணியாளர்கள் நியமிக்காமல் அலட்சியமாகசெயல்படும் அரசே பொறுப்பு. பல பள்ளிகளில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் இணைந்து அவர்களின் சொந்த பணத்தில் துப்புரவுபணியாளர்களை நியமித்துள்ளனர்.
மாணவர்களைப் போன்று, ஆசிரியர்களும்பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து ஆரம்பப் பள்ளிகளிலும்,அடிப்படை பணியாளர்களை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a comment