Labels

rp

Blogging Tips 2017

பள்ளியில் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியர் கைது

பண்ருட்டி அருகே ஒறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு
பண்ருட்டி அருகே ஒறையூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தட்டாஞ்சாவடியை சேர்ந்த குமரகுருநாதன் என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அதே பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியை ஒருவருக்கு நேற்று குமரகுருநாதன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த சம்பவத்தை அவர் தனது சக ஆசிரியைகளிடம் கூறி கதறி அழுதார்.
உடனே சக ஆசிரியைகள் குமரகுருநாதனிடம் சென்று தகராறில் ஈடுபட்டனர். அதற்கு ஆசிரியர் குமரகுருநாதன், சக ஆசிரியைகளை திட்டியுள்ளார்.
ஆசிரியர் கைது
இதற்கிடையே இந்த சம்பவம் பற்றி அறிந்த பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பிறகு ஆவேசமடைந்த பொதுமக்கள் குமரகுருநாதனை பள்ளி அறையில் வைத்து பூட்டு போட்டனர்.
உடனே புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பள்ளியில் சிறை வைக்கப்பட்ட ஆசிரியர் குமரகுருநாதனை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
மேலும் இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமரகுருநாதனை கைது செய்தனர். இந்த சம்ப

No comments:

Post a comment