Labels

rp

Blogging Tips 2017

சென்னை பல்கலை இலவச கல்வி திட்டத்தில் இளங்கலை படிக்க விண்ணப்பம் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழகம் சார்பில், ஏழை மாணவர்கள் இளநிலை கல்வி கற்கும் வகையில், கடந்த 2010-11ம் கல்வி ஆண்டு முதல் இலவச கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள
சென்னை பல்கலையின் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த 3 மாவட்டத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள் மற்றும் கைம்பெண் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இலவச கல்விதிட்ட விண்ணப்பத்தையும் மற்றும் விவரங்களையும் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ள லாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களுடன், பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.

No comments:

Post a comment