Labels

rp

Blogging Tips 2017

விடுமுறை இல்லை; ஆசிரியர்கள் புலம்பல்


விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் லோக்சபா தேர்தல் பணிக்காக, விடுமுறை மறுக்கப்படுவதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு வரும் 17ம் தேதி, மூன்றாம் பருவ தேர்வு துவங்குகிறது. இப்பள்ளி மாணவர்களுக்கு, மே 1 முதல், கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியுள்ளது; வரும் 19 வரை இப்பணி நடைபெறும். லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
இப்பணிகளிலும், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.பொதுத்தேர்வு சமயத் தில், ஆசிரியர்கள் கண்டிப்பாய் விடுமுறை எடுக்கக்கூடாது என கல்வித்துறை எச்சரித்தது. சில ஆசிரியர்கள், தங்களது குழந்தைகள் பொதுத்தேர்வு எழுதும்பட்சத்தில், அவர்களுக்கு உதவியாக தேர்வு நாட்களில் விடுமுறை எடுப்பதையும் கட்டாயம் தவிர்க்குமாறு, அறிவுறுத்தியது. தற்போது தேர்தல் பணி காரணமாகவும், விடுமுறை எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "வழக்கமாக, பொதுத்தேர்வு நாட்களின்போது, விடுமுறை தவிர்க்குமாறு, அறிவுறுத்தப்படும். தற்போது தேர்தல் பணியும் குறுக்கிடுவதால், விடுமுறையை கண்டிப்பாய் அனுமதிக்க முடியாது என கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்."உறவினர் இல்ல விசேஷம், கோவில் திருவிழாக்கள் என எதி லும் பங்கேற்க முடியாத, சூழல் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

No comments:

Post a comment