Labels

rp

Blogging Tips 2017

10ம் வகுப்பில் தேர்ச்சி அதிகம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு அரசு பரிசுத் தொகை கிடைக்குமா?


பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக அளவில் மாணவ மாணவியர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். அதேபோல மாவட்ட அளவிலும் அதிக அளவில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். இதையடுத்து ஆண்டுதோறும் அரசு வழங்கும் பரிசுத் தொகையின் மொத்த அளவும் அதிகரிக்கும். இதை அரசு குழப்பம் இல்லாமல் கொடுக்குமா என்று மாணவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுதி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ஆண்டுதோறும் அரசு தரப்பில் பரிசுத் தொகைகள்
வழங்கப்பட்டு வருகின்றன. திறமை மிக்க மாணவர்கள் மேற்படிப்பு தொடர்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி மாநில அளவில் தமிழை முதன்மை பாடமாக கொண்டு பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முதல் 3 இடங்களை பெறும் 3 மாணவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பை பொறுத்தவரை மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவ மாணவியருக்கு ரூ.25 ஆயிரம், இரண்டாம் இடம் பிடிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.20 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டை பொறுத்தவரை முதலிடம் பெற்றோர் 19 பேர். அவர்களுக்கு ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். இரண்டாம் இடம் பிடித்தவர்கள் 125 பேர். இவர்களுக்கு ரூ.25 லட்சம் வழங்கப்பட வேண்டும். மூன்றாம் இடம் பிடித்தவர்கள் 321 பேர். அவர்களுக்கு ரூ.48 லட்சத்து 15 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். இது தவிர மாவட்ட அளவில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு தலா ரூ.1500 வழங்க வேண்டும். அப்படி பார்த்தால் மாவட்ட அளவில் ஆயிரக்கணக்கானோர் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ மாணவியர் முன்னணி இடங்களை பிடித்துள்ளதால் அரசுத் தரப்பில் வழங்க வேண்டிய பரிசுத் தொகை குழப்பம் இல்லாமல் வழங்கப்படுமா என்ற சந்தேகம் இப்போதே மாணவர்களுக்கு எழுந்துள்ளது.

No comments:

Post a comment