Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு.... சில கேள்விகள்

அரசு மருத்துவரின் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தானே சிகிச்சை எடுக்கவேண்டும்!
 
அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் நடத்துநரின் குழந்தைகள் அரசு பேருந்தில் தானே பயணிக்க வேண்டும்!
 
அரசு கல்லூரி விரிவுரையாளர்களின் குழந்தைகள் அரசு கல்லூரியில் தானே படிக்க வேண்டும்!
 
கோஆப்டெக்ஸ்-ல் பணி புரிபவர்களின் குழந்தைகள் கோஆப்டெக்ஸ்-ல் தானே துணி எடுக்கவேண்டும்!
 
அரசு வங்கிகளில் பணி புரிபவர்களின் குழந்தைகள் அரசு வங்கிகளில் தானே வங்கிக்கணக்கு வைத்திருக்கவேண்டும்!
 
அரசு தபால்துறையில் பணி புரிபவர்களின் குழந்தைகள் அரசு தபால்துறை மூலமாகத்தானே கடிதங்கள் அனுப்ப வேண்டும்!
 
BSNL-ல் பணி புரிபவர்களின் குழந்தைகள் BSNL SIMCARD தானே வைத்திருக்கவேண்டும்!
 
 
லஞ்சம் கொடுக்காமல் அனைத்து வேலைகளையும் முடிப்பேன் என்று கூறும் சமானியன் யாராவது இருக்கிரார்களா?
 
இவையெல்லாம் நடக்க இயலாதபோது...
..
அரசு ஆசிரியரின் குழந்தைகள் அரசு பள்ளியில் பயில வேண்டும் என்று பொத்தாம் பொதுவாக கூறுவது என்பது எவ்வளவு தூரம் சரியான கருத்தாக இருக்க முடியும்?
எவ்வளவோ அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் இன்று அரசு பள்ளிகளில்தான் படித்து வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை!!!!.
 
ஏன்,நாட்டை ஆளும் பிரதமர், முதல்  அமைச்சர்,அமைச்சர்கல், நாடாளுமன்ற  சட்டமன்ற உறுப்பினர்கள்,அவர்களின் குடுப்பத்தார் அனைவரும்  உடம்புக்கு சாதாரண காய்ச்சலுக்குக்கூட தனியாரின் மல்டி சஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் அரசு செலவில் சிகிச்சை எடுப்பது ஏன்? 
 
அரசு மருத்துவமணை மற்றும் டாக்டர்கள் மீது நம்பிக்கையில்லையா?
 
அவர்களின் குழந்தைகள் படிக்கும் நிறுவனம் பற்றி ஒருவரும் பேச முன்வராதது ஏன்?
 
இன்று தமிழகத்தில் 6 முதல் 60 வரை சுலபமாகச் செய்யக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் ஆசிரியர்களை குறைகூறுவது!!!!

ஆசிரியர்களும் உங்களைப்போன்று ஆசாபாசங்கள் நிறைந்த மனிதர்கள்தான் என்பதை மனதில் நினையுங்கள் நண்பர்களே!!!!
 
அரசுப்பள்ளி மாணவர் பற்றி
அரசுப் பள்ளி மாணவர்கள் அன்பிற்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். தனியார் பள்ளிகளைப் போல தண்டனை, தண்டம் கட்டுதல், பெற்றோரை அழைத்து வரச் சொல்லி மிரட்டுதல், சரியாகப் படிக்காவிட்டால் நீக்குதல் என்ற மனிதாபிமானமற்ற அராஜகங்களை இங்கே செயல்படுத்துவதில்லை.
அதுமட்டுமல்ல

இன்னமும் நாங்கள் தனியார் பள்ளிகள் ஒதுக்கித் தள்ளுகிற ஏழை மாணவர்களுக்குத் தான் கற்பிக்கிறோம். அவர்களது குடும்ப சூழலையும், பொருளாதார சூழலையும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பள்ளிக்கே வரமாட்டேன், கூலி வேலைக்கும், கொத்தனார் வேலைக்கும்,செங்கல் சூளை வேலைக்கும் தான் செல்வேன் என அடம்பிடிக்கிற மாணவர்களை, பள்ளிகளுக்கு பெரும்பாலான நாட்கள் வருகை தராத மாணவர்களைத் தான் நாங்கள் முடிந்த அளவிற்கு பயிற்சி அளித்து அரசுத் தேர்வுக்கு அனுப்புகிறோம்.
குறைவான அளவே, அவர்களால் படிக்க முடிந்த அளவு எழுத முடிந்த அளவு கொடுத்து, அவர்களை எங்கள் செலவில் நிறைய நோட்டு,பேனா, ஃஸெராக்ஸ், கையேடுகள் மற்றும் பட்டினியுடன் வரும் சிலருக்கு காலை நேர சிற்றுண்டிகள் சொந்தசெலவில் வாங்கி கொடுத்து ஊக்குவித்து கிடைக்கிற வகுப்பறைகளையும், மரத்தடிகளையும் பயன்படுத்தி படிக்க வைக்கிறோம்.
சுருக்கமாகச் சொன்னால் அரசுப் பள்ளிகள், எந்திரங்களை உருவாக்குவதில்லை. அப்துல்கலாமைப் போல், மயில்சாமி அண்ணாதுரை யைப் போல் மாண்புமிக்க சமுதாயம் போற்றும் மனிதர்களை மட்டுமே உருவாக்குகிறது.

 அரசுப்பள்ளி ஆசிரியன் என்பதில் பெருமிதத்துடன்
 அன்புடன் ரக்‌ஷித்

No comments:

Post a Comment


web stats

web stats