Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு

நேற்று காலை11. மணியளவில்   தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடனான சந்திப்பு நடைபெற்றது .
.         இச்சந்திப்பின் போது மாநில பொருளாளர் திரு அலெக்சாண்டர்,மாநிலதுணைத்தலைவர்கள் திரு.கே.பி.ரக்‌ஷித்,திரு முருகேசன் மற்றும் தலைமை நிலைய செயலர்திரு.க.சாந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

அப்போது

1.                                   பி.லிட் படித்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்,தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின்பு  பிஎட் முடித்தவர்களுக்கு பல இடங்களில் ஊக்கஊதியம் அனுமதிக்கப்படுகிறது.ஆனால் சில இடங்களில் அவ்வாறு அனுமதிக்கப்படுவதில்லை.ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டப்படி பெற்ற தகவல் அடிப்படையில் நமது இயக்குனரகம் வழங்கலாம் என செயல்முறைக்கடிதம் வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டு, அனைவருக்கும் ஊக்க ஊதியம் கிடைக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள  விண்ணப்பம் அளிக்கப்பட்டது.


2. பொருளாதாரம்.மற்றும் வணிக வியல் பட்டம் பெற்ற பின்பு பிஎட் முடித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் மறுக்கப்படுவதுகுறித்து இயக்குனர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு,அவ்வாறு மறுப்பது அரசாணைக்கு முற்றிலும் எதிரானது என அரசாணை நகல் வழங்கப்பட்டு அனைவருக்கும் வழங்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள  விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

3.இந்தாண்டு பணி மாறுதல் கலந்தாய்வினை  ஜூன் மாத்த்திலேயே நடத்தவும்,2013 ஆண்டு முன்னுரிமைப்பட்டியல் படியே பட்ட்தாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டது

4. பதவி உயர்வு கலந்தாய்வுகள் முடித்த பின்னரே பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திகேட்டுக்கொள்ளபட்டது

5. உடுமலை வட்டாரத்தில் உள்ள்  5 பள்ளிகள் புலிகள் வாழும் காட்டுப்பகுதியிலமைந்திருந்தாலும் அவை மலைப்பள்ளிகளாக வகைப்படுத்தாமை குறித்தும்,அவற்றை மலைப்பள்ளிகள் என உட்படுத்த  வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று மாவட்டக்கல்வி அலுவலரின் கள ஆய்வு அறிக்கை அணுப்ப கேட்டு.அவ்வறிக்கை பற்ரமைக்கும்  நன்றி பாராட்டி அதன் மீது அரசானை பெற துரித நடவடிக்கைக்கு மேற்கொள்ள வேண்டுமாய் வேண்டப்பட்டது.

No comments:

Post a comment