Labels

rp

Blogging Tips 2017

கடனை முன்­கூட்டி முடிப்­ப­வ­ரிடம்வங்­கிகள் அப­ராதம் வசூ­லிக்க தடை


மும்பை:வாங்­கிய கடனை, முன்­ன­தா­கவே முடிக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம், வங்­கிகள் அப­ராதம் வசூலிக்க கூடாது என, ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது. இதன் மூலம், கடன்­தா­ரர்­களின் நீண்ட நாள் கோரிக்­கைக்கு தீர்வு காணப்­பட்­டுள்­ளது.

கடந்த இரண்டு நாட்­க­ளாக, ரிசர்வ் வங்கி, தொடர்ந்து அதிரடி உத்­த­ர­வு­களை பிறப்­பித்து வருகிறது.பரா­ம­ரிக்­கப்­ப­டாத சேமிப்பு

கணக்கில்,குறைந்­த­பட்ச தொகை இல்லை என்­ப­தற்­காக, வாடிக்­கை­யா­ளர்­க­ளிடம் வங்­கிகள் அப­ராதம் வசூ­லிக்க கூடாது என, நேற்று முன்­தினம் ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டி­ருந்­தது.



மேலும், 10 வய­துக்கு மேற்­பட்ட சிறுவர், சிறு­மி­யர்­களும் தனியாக சேமிப்பு கணக்கு துவங்க, வங்­கி­களுக்கு அனு­மதி வழங்­கி­யது.இந்­நி­லையில், வாங்­கிய கடனை நிர்­ண­யிக்­கப்­பட்ட காலத்­திற்கு முன்­பா­கவே செலுத்­து­வோரிடம், குறிப்­பிட்ட கட்­ட­ணமோ அல்­லது அப­ரா­தமோ வசூ­லிக்க கூடாது என, வங்­கி­க­ளுக்கு,ரிசர்வ் வங்கி உத்­த­ர­விட்­டுள்­ளது.ஒரு சில வங்­கிகள், முன்­ன­தாக முடிக்­கப்­படும் கடன் தொகைக்கு, 2 சத­வீதம் வரை, அப­ராதம் விதிக்கின்­றன.

மாறு­படும் வட்டி விகி­தத்தில், வீட்டு வசதிக் கடன், தனி நபர் கடன், நிறு­வன கடன், வாகனக் கடன் வாங்கி, முன்­ன­தா­கவே கணக்கை முடிக்கும் வாடிக்­கை­யாளர்கள் ரிசர்வ் வங்­கியின், இந்த உத்­த­ரவால் பயன் பெறுவர்.மேலும், ஏற்­கெ­னவே கடன் பெற்­ற­வர்­க­ளுக்கும், புதி­தாக கடன் பெறு­வோ­ருக்கும் இடை­யி­லான பார­பட்ச அணு­கு­மு­றைக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, வங்­கி­க­ளி­டையே ஆரோக்­கி­ய­மான போட்­டிக்கும் இந்த உத்­த­ரவு, வழி வகுத்­துள்­ளது.

No comments:

Post a Comment