Labels

rp

Blogging Tips 2017

பட்டச் சான்றிதழ், விண்ணப்பங்களில் தாய் பெயரும் இடம்பெற வேண்டும்: யுஜிசி


பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் என கல்வி சார்ந்த அனைத்து விதமான பதிவேடுகளிலும் தாயின் பெயரும் இடம்பெறச் செய்ய வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

விதவை அல்லது பிரிந்து வாழும் தாயின் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு சட்டப் பிரச்னைகளுக்கும் இது உதவியாக இருக்கும் என யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1998 ஏப்ரல் 18-ஆம் தேதி அன்றே இதுதொடர்பான அறிவுறுத்தலை யுஜிசி செய்துள்ளது. ஆனால், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் அதை பின்பற்றாததைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் யுஜிசி வலியுறுத்தியுள்ளது.



அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் இதற்கான அறிவுறுத்தலை யுஜிசி வெளியிட்டுள்ளது. அதில், பட்டச் சான்றிதழ்கள், பிற சான்றிதழ்கள், கல்லூரி விண்ணப்பப் படிவங்கள் என அனைத்து விதமான கல்வி சார்ந்த பதிவேடுகளில் மாணவரின் பெயர், தந்தை பெயர், தாயின் பெயர் ஆகியவை இடம்பெறுவதை பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உறுதி செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.

பாலினப் பாகுபாட்டை ஒழித்து, ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலையை உருவாக்கும் நோக்கத்தோடு இந்த முயற்சியை எடுத்திருப்பதாக யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக விதவை அல்லது பிரிந்து வாழும் தாயின் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு சட்டப் பிரச்னைகளுக்கும் இது உதவியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில்... தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் பட்டச் சான்றிதழ்களில் தந்தை பெயர் கூட இதுவரை இடம்பெறவில்லை. மாணவரின் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment