Labels

rp

Blogging Tips 2017

மாநில பொதுக்குழு-நாளை திருவண்ணாமலை நகரில்

நாளை -20.07.2014 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுக்குழு திருவண்ணாமலை நகரின் மத்தியில் நூறாண்டு விழா கண்ட டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா கட்டிட அரங்கில்சிறப்பாக நடைபெற உள்ளது.
பொதுக்குழுவிற்கு வருவோர் திருவண்ணாமலை பெரியார் சிலை பஸ் நிறுத்தம் இறங்கி வரலாம்
.
காந்தி சிலை ,வி.பி சி தியேட்டர் , சன்னதிதெரு ஆகிய பகுதிகளிலிருந்தும் எளிதாக பள்ளி வளாகத்தை அடையலாம்.
திருவண்னாமலையில்
உலகப்புகழ்பெற்ற அருள்மிகு அண்ணாமலையார் ஆலயம்,
இரமாணாஸ்ரமம்

ஷேஷாத்திரி சுவாமிகள் ஆஸ்ரமம்
விசிறி சாமியார் என்றழைக்கப்பட்ட யோகி ராம்சூரத்குமார் ஆஸ்ரமம்
கந்தாஸ்ரம்மம்
விருப்பாட்சி குகை
குகை நமச்சிவாயர் கோயில்
மற்றும்
கிரிவலம் என்றழைக்கப்படும் மலைவலம்
ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த நகரில்
நடைபெறும் மாநில பொதுக்குழுவில்
மத்திய மாநில
அரசுகளை வலியுறுத்தியும்
ஆசிரியர்கள் பிரச்சினை
மற்றும்
பொதுப்பிரச்சினை
குறித்தும் விவாதித்து
முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
முன்னதாக
இன்று சனிக்கிழமை மாலை
மாநில பொறுப்பாளர்கள் கூட்டம்
திருவண்ணாமலை
டி.எம் டவுன்பள்ளி
வளாகத்திலேயே நடைபெற உள்ளது.
மாநில மாவட்ட வட்டார பொறுப்பாளர்களை அன்போடு அழைக்கிறோம்
அன்புடன்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
திருவண்ணாமலை மாவட்டக்கிளை

No comments:

Post a Comment