- சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகில இந்திய பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்கு நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.
- முக்கிய முடிவுகள், திட்ட அமலாக்கங்களில் பெருந்தன்மையுடனும், அரசியல் பாரபட்சமின்றியும் நடந்து கொள்ள வேணடும்.
- உயர் பதவிகளில் உள்ளவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும்.
- நல்ல கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். கடமைகளை செய்வதில் தவறக்கூடாது.
- பொதுமக்களால் மிகவும் எளிதில் அணுகப்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.
- பொதுமக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போது அதிகபட்ச பொறுபபுணர்வுடன் நடந்து கொள்ளுங்கள்.
- நிர்வாகத்தில் வெளிபபடை தன்மையாக இருங்கள். சமுதாயத்தில் நலிவடைந்தவர்கள், ஏழை – எளியவர்கள் உங்களைத் தேடி வரும்போது அவர்களிடம் பரிவுடன் பேசுங்கள். கனிவாக நடந்து கொள்ளுங்கள்.
- உங்கள் கடமையில் இருந்து தவறு செய்யும் வகையில் தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்புகளோ பணம் மற்றும் கோரிக்கைகள் மூலம் உங்களை ஈர்க்க நினைத்தால் அடிபணியாதீர்கள்.
- உங்கள் பதவியை உங்களின் தனிப்பட்ட நலனுக்காகவோ அல்லது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் நலனுக்காகவோ பயன்படுத்தாதீர்கள்.
- அரசு அதிகாரிகள் செய்யும் தேர்வு மற்றும் பரிந்துரைகள் அனைத்தும் தகுதி அடிப்படையிலேயே இருக்க வேண்டும்.
- ஒருபோதும் பாரபட்சத்துக்கு இடம் கொடுத்துவிடாதீர்கள்.
- அதிகாரிகளின் ஒவ்வொரு நடவடிக்கையும் சட்டத்தையும் ஜனநாயகத்தையும் மேன்மை படுத்துவதாக இருத்தல் வேண்டும்.
- இதன் மூலம் நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் பாதுகாக்க முடியும்.
- பொதுமக்கள் நலன் கருதி நீங்கள் எடுக்கும் முடிவு தனிப்பட்ட முறையில் உங்களால் மட்டுமே எடுக்கப்படுவதாக இருக்க வேண்டும்.
- பொது சொத்துக்களை திறமையாக பயன்படுத்துங்கள்.
- அரசு பணத்தை செலவிடுவதில் திறமையான முடிவு எடுங்கள். சிக்கனமாக, சிறப்பாக செலவுகளை செய்யுங்கள்.
- சட்டம், விதிகள், ஒழுங்கு நடத்தை விதிகள் மற்றும் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள நடத்தை கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒரு காரியத்தை ஒரு போதும் செய்யாதீர்கள். அத்தகைய செயல்களில் இருந்து விலகியே இருங்கள்.
இவ்வாறு பிரதமர் மோடியின் 19 உத்தரவுகளில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a comment