Labels

rp

Blogging Tips 2017

கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியையின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் கல்வி அதிகாரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியையின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கடன் தொகையை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு கடன் சங்கம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆசிரியர்கள், பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் தனி அதிகாரி ரவீந்திரன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் லூர்து, விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றிய போது கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று இருந்தார். இந்த கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 360 ரூபாயாக திருப்பி செலுத்த வேண்டும். ஆனால், ஆசிரியை லூர்து இந்த தொகையை திருப்பி செலுத்தவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு மனு அனுப்பினேன். ஆசிரியை லூர்து சம்பளத்தில் இருந்து கடன் தொகையை பிடித்தம் செய்து செலுத்த சாணார்பட்டி உதவி தொடக்கக்கல்வி அதிகாரிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி 20.2.2012 அன்று உத்தரவிட்டார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
அதன்பின்பும், ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கடன் தொகையை திரும்ப செலுத்த உதவி தொடக்கக்கல்வி அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து கடன் தொகையை பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்தில் செலுத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
பிடித்தம் செய்ய உத்தரவு
இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஆஜரான வக்கீல் சண்முகராஜாசேதுபதி, ‘ஆசிரியையின் சம்பளத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 சதவீத தொகையை பிடித்தம் செய்து திரும்ப செலுத்தவும், கடன்தொகையை முழுமையாக திரும்ப செலுத்துவதற்கு முன்னதாக ஆசிரியை ஓய்வு பெற்றால் அவரது பணிக்கொடையில் இருந்து மீதமுள்ள கடன் தொகையை பிடித்தம் செய்து செலுத்தவும் கல்வி அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்‘ என்றார்.
மனுவை விசாரித்த நீதிபதி, கூட்டுறவு கடன் சங்க வக்கீல் தெரிவித்துள்ளபடி கடன் தொகையை ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து திரும்ப செலுத்த சாணார்பட்டி உதவி தொடக்கக்கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a comment