Labels

rp

Blogging Tips 2017

அரசு ஒப்பந்தப் பணியாளருக்கு பிஎஃப், ஓய்வூதிய சலுகைகள் கிடையாது: மத்திய அரசு

சில அரசுத்துறைகளில் ஒப்பந்த அடிப்படை, தனியார் நிறுவனங்களிடமிருந்து அவுட்சோர்ஸ் முறையில் பணியில் அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிராவிடண்ட் பஃண்ட்), ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களின் கீழ் எந்த சலுகையும் வழங்கப்படுவதில்லை என்று மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவுக்கு பதிலளித்து தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் சார்பில் கூறப்பட்டிருந்ததாவது:

அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளுக்கு, ஒப்பந்த அடிப்படையில் நேரடியாகவும், தனியார் நிறுவனங்களிடமிருந்து அவுட்சோர்ஸிங் முறையிலும் அரசுப் பணிகளுக்குத் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.அவர்களுக்கு கட்டாய தேசிய விடுமுறை நாள்கள், வார விடுப்பு தவிர, கூடுதலாக வேறு விடுப்புச் சலுகைகள் வழங்கப்படுவதில்லை.வருடாந்திர ஊதிய உயர்வு அளிப்பதற்கும் வகை செய்யப்படவில்லை. பணி நியமனத்தின்போது தரப்பட்ட அதே ஊதியத்திலேயே பல ஆண்டுகளாக அவர்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஒப்பந்தக் காலம் முடிவடைந்தால் மீண்டும் அவர்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மூலமாகத்தான் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

மேலும், அரசுத் துறைகள் மூலம் நேரடியாக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படும் ஊழியர்களுக்கு பி.எஃப் வசதி கிடையாது. ஆனால், தனியார் நிறுவனங்கள் அவுட்சோர்ஸிங் முறையில் அரசுத் துறைகளுக்கு வழங்கும் பணியாளர்களுக்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்களே அவர்களுக்கான பி.எஃப் வசதியை ஏற்படுத்தித் தருகின்றன. கடந்த ஜூலை மாதம் வரை தொழிலாளர் துறையின் கீழ் இவ்வாறு 700 பேர் பணிமர்த்தப்பட்டனர் என்று அந்த அமைச்சகம் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment