கடந்த மாதம் 21ஆம்தேதி காலை சென்னையில் இருந்து தூரந்தோ ரயில் மூலம் டெல்லி புறப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டெல்லி தூதுக்குழு 22ந்தேதி மதியம் 1.00 மணியளவில் டெல்லி சென்றடைந்தது.பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமிதலைமையிலான இக்குழுவில்
1.திரு.கே.எஸ்.மணி,மாநிலத்தலைவர்
2.திரு.டி.அலெக்ஸாண்டர்,மாநிலபொருளாளர்
3. திரு.கே.பி.ரக்ஷித்,மாநில துணைத்தலைவர்,
4.திரு.அருள்சாமி,மாநில துனைப்பொதுச்செயலர்.
5. திரு.க.சாந்தகுமார்,தலைமைநிலையச்செயலர்.
6.திரு.ஜெகன்னாதன்,தேனி மாவட்டஆசிரியர்,
7. திரு.ந.ஆனந்.ஈரோடு மாவட்ட ஆசிரியர் ஆகியோர் பங்காற்றினர்
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் 29ஆம் தேதி வரை தங்கியிருந்த தூதுக்குழு மத்திய அமைச்சர்கள்,மற்றும் அரசு துறைச்செயலர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,டெல்லி தமிழ்ச்சங்கபொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர்களை நேரில் சந்தித்து கல்வி சார் கோரிக்கைகள் அளித்தது. பின்னர் 29ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டதூதுக்குழு 31.இரவு 10மணியளவில் சென்னை திரும்பியது