Labels

rp

Blogging Tips 2017

தண்டனைகள் அதிகரிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும்!

பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்ளை ஆசிரியர்கள் கண்டிக்க இன்றைய பெற்றோர் அனுமதிப்பதில்லை. மாறாக, பள்ளி மாணவ-மாணவிகளைக் கண்டிப்புடன் நல்வழிப்படுத்தும் ஆசிரியர்கள் சிலர் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர், உறவினராலேயே தாக்கப்படும் அவலங்களும் நடந்தேறி வருகின்றன. அப்படியிருக்கையில், வீட்டிலாவது பிள்ளைகளைக் கண்டிப்புடன் வளர்த்தால்தானே அவர்கள் ஒழுக்கமுடையவர்களாக உருவாவர். அப்படி கண்டிப்புடன் வளர்க்ப்பட்ட குழந்தைகள்தான் இன்று மேம்பட்ட பண்பாளர்களாக இருக்கிறார்கள்.

ஒரே நாளில் ஒரு சிறுவன் குற்றவாளியாக ஆவதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வன்மமாக மாறும் அவன் இறுதி நிலையிலேயே குற்றவளியாகிறான். அவனை பெற்றோர் சரிவர கண்காணித்து வளர்த்திருந்தால் குற்றவாளியாகாமல் இருந்திருக்கலாம். அந்த வகையில், பிள்ளைகளை சரியாக உருவாக்காத பெற்றோரும் குற்றவளிகளே. கொடூரக் குற்றச் செயலில் ஈடுபடும் 14 வயது முதல் 18 வயதுக்குள்பட்டவர்களின் பொறுப்பற்ற பெற்றோர் மீதும் ஒரு வழக்கு பதிந்து தண்டனை வழங்குவதில் தப்பில்லை என்று தோன்றுகிறது.
இந்தியர் சுய ஒழுக்கத்தில் சிறந்தவரென்று உலகம் நம் மீது வைத்திருக்கும் நன்நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் கற்பழிப்பு மற்றும் கொலை சம்பவங்கள் நம் நாடெங்கிலும் அதிகரித்துள்ளன.
இன்று பட்டப்பகலில் ஒரு மூன்று வயது பெண் குழந்தை கூட பள்ளிக்கோ அல்லது விளையாடச் சென்றோ வீடு திரும்ப முடிவதில்லை. கொட்டுகின்ற மழைக்குகூட ஓரிடத்தில் பாதுகாப்பாக ஒதுங்க முடியாமல், நனைந்தடியே அச்சத்துடன் செல்லும் நிலையில்தானே இன்றும் பெண்கள் இருக்கிறார்கள். இந்த அவலத்திற்கு ஒட்டு மொத்த ஆண்சமூகம்தானே பொறுப்பு?
பெண்களை போகப்பொருளாகப் பார்க்கும் கல்நெஞ்சக்காரர்களால்தான் பெண்களுக்கெதிரான வன்குற்றங்களில் ஈடுபட முடியும். பாலியல் வன்குற்றச்செயலில் ஈடுபட முற்படும் ஒருவன் தனது தாய், மனைவி சகோதரி, மகள் போன்ற பெண் உறவுகளை ஒரு முறை நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களில் யாரேனும் ஒருவர்க்கு இதுபோன்ற கொடுமை நடந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். மனிதன் ஒருபோதும் மனிதத்தன்மையை இழந்து மிருகநிலைக்குச் செல்லக் கூடாது.
ஒவ்வொரு ஆணும் தன்னைச் சுற்றியுள்ள பெண்களை சகோதரியாகவோ, மகளாகவோ பாவித்துவிட்டால் இது போன்ற குற்றங்களுக்கு ஏது இடம்? வன்குற்ற வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் தண்டனை போதுமானதாக இல்லை. சிறைதண்டனை அளித்தாலும் பிணையில் வெளிவந்துவிடுகிறார்கள். சிறையிலுள்ள காலத்திலும் அவர்கள் சிறைத்துறையினரால் செல்லப்பிள்ளைகளாக கவனித்துக் கொள்ளப்படுகிறார்கள். அதாவது, அவர்களுக்குத் தேவையான புகையிலை, குட்கா, மது, பிரியாணி ஆகியவற்றை சிறைத்துறையினர் வழங்கிவிடுகின்றனர்.
ஒவ்வொரு முறை சிறை சோதனையின் போதும் சிகரெட் பாக்கெட்டுகள், புகையிலைப் பொருள்கள், செல்லிடப்பேசி பிடிபடுவதே இதற்கு சாட்சி.
பாலியல் வழக்குகள் பெருகி வரும் இன்றைய சூழலுக்கு ஏற்ப சட்டம் திருத்தப்பபட வேண்டும். ஒரு பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு 30 நாள்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கும் விதத்தில் விசாரணை விரைந்து முடிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் குற்றவாளிகள மேல் முறையீடு செய்து வழக்கிலிருந்து விடுதலையடைய அனுமதியளிக்ககூடாது.
தண்டனைகள் அதிகரிக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும்!

No comments:

Post a comment