தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஆசிரியர்கள் மாநாடு வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் டெல்லியில் நடைபெற உள்ளது.
அம்மாநாட்டினை நடத்துவதற்கான அடிப்படை ஆயத்தப்பணிககளான இடம் தேர்வுசெய்தல், வரவேற்புகுழு தலைவர்,கமிட்டி அமைத்தல்,ஆசிரியர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தல், உணவு வசதி மேற்கொள்ளுதல்,மாநாட்டில் மத்திய அமைச்சர்கள்,அதிகாரிகள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்தல் ஆகிய முன்னேற்பாட்டு பணிக்காக கடந்த 27.01.2015 அன்று மாலை பொதுசெயலர் திரு செ.முத்துசாமி மற்றும் மாநிலத்தலைவர் திரு கு.சி.மணி ஆகிய இருவரும் டெல்லி சென்றுள்ளனர்.கடும் குளிரிலும் (டெல்லியில் தற்போது காலை10.00 மணிவரை கடும் குளிர் நிலவுகிறது மேலும் மாலை 5 மணிக்கே வெளியில் தலைகாட்ட முடியாத குளிர் ஆரம்பிக்கிறது) இப்பணிகளை பொதுசெயலர் மற்றும்தலைவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி செய்துவருகின்றனர்-
No comments:
Post a comment