Labels

rp

Blogging Tips 2017

பிளஸ் 2 தேர்வுக்கு ஏற்பாடுகள் மும்முரம்

தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5ம் தேதி துவங்கவுள்ள நிலையில், செய்முறை தேர்வுகள் தற்போது, நடந்து வருகின்றன. அறிவியல் பாடப்பிரிவுக்கான செய்முறை தேர்வுகள் கோவையில் நேற்று துவங்கியுள்ளது.நடப்பு கல்வியாண்டில், விடைத்தாளை வீணடிக்காத வண்ணம் பாடவாரியாக, விடைத்தாள்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.குறிப்பாக, மொழிப்பாடங்களுக்கு
கோடிட்ட விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், விடைத்தாள் கட்டுக்கள் ஏற்கனவே, தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட வேண்டிய, 'டாப்ஷீட்' தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும், இணைத்து தைக்கும் பணி நேற்று துவங்கியது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், இப்பணிகளுக்காக, டெய்லர்கள் தேர்வு செய்துள்ளனர்.இப்பணிகளில், எவ்வித ஊசி, நுால் பயன்படுத்தவேண்டும், எவ்வாறு இணைக்கவேண்டும் என்பது குறித்த விதிமுறைகள் தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டதாகவும், மூன்று நாட்களுக்குள் இப்பணியை முடிக்க அறிவுறுத்தியுள்ளதாகவும் முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தெரிவித்தார்.

No comments:

Post a comment