Labels

rp

Blogging Tips 2017

தமிழகத்தில், பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை, இறைவணக்கத்தில் எடுக்க வேண்டும்

பள்ளி இறைவணக்கத்தில், டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை, மாணவர்கள், நேற்று முன்தினம் ஏற்றனர்.
தமிழகத்தில், பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பு குறித்த உறுதிமொழியை, இறைவணக்கத்தில் எடுக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், திருத்தணி நகராட்சியின் சார்பில், நேற்று முன்தினம், டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து, திருத்தணி ம.பொ.சி.சாலையில்
உள்ள தளபதி மேனிலைப் பள்ளியில், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். காலை, 9:20 மணிக்கு நடந்த இறைவணக்கத்தில், மாணவர்கள், நகராட்சி துப்பரவு ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில், டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிக்க, மழைநீர் தேங்காமல், உரல், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்குவதை தடுத்து அப்புறப்படுத்துவேன்; சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்துக் கொள்வேன்; இதுகுறித்து, பொதுமக்களிடம் எடுத்துக் கூறுவேன் என, உறுதிமொழி எடுத்தனர்.

No comments:

Post a comment