அதிகாரபூர்வ செய்தித்தொடர்புகளுக்கு சொந்த மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்த அரசு ஊழியர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தகவல்தொடர்பு ஆதாரங்களை பயன்படுத்துதல் பற்றிய கொள்கையில் கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதில், “அரசு நெட்-வொர்க்கிலிருந்து சொந்த மின்னஞ்சல் முகவரிகளை பயனாளர்கள் பயன்படுத்துவது கூடாது. அதிகாரபூர்வ தகவல்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்த மின்னஞ்சல் சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல் அரசு அதிகாரிகள், அரசு அல்லாத மின்னஞ்சல் முகவரிகளுக்கு இதிலிருந்து ஃபார்வர்ட் செய்யவும் கூடாது.
இந்தக் கொள்கை மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும்.
அமெரிக்க உளவுத்துறையினர் நாடுகளின் இணையதள தரவுகளை ரகசியமாக கண்காணிக்கிறது என்று எட்வர்ட் ஸ்னோடன் கூறியதையடுத்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்தப் புதிய கொள்கைகளின் படி அரசு அதிகாரிகளுக்கு அவர்கள் வகிக்கும் பொறுப்பின் பெயரில் ஒரு மின்னஞ்சல் முகவரியும், சொந்தப் பெயரில் ஒரு முகவரியும் என 2 மின்னஞ்சல் முகவரிகள் அளிக்கப்படும்.
அரசு அங்கீகாரம் பெற்ற மின்னஞ்சல் சேவையிலிருந்து சொந்த மின்னஞ்சல்களை தங்களது பெயரில் தொடங்கப்படும் முகவரியிலிருந்து அனுப்பலாம்.

No comments:
Post a comment