Labels

rp

Blogging Tips 2017

தெரியுமா சேதி?


1. கொசு அடிக்கும் எலக்ட்ரானிக் பேட் எப்படி வேலை செய்கிறது?

2. டியூப் இல்லாத டயர்கள், காற்றடைக்கும் டயர்களைவிட சிறந்ததா?

3. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம

1. கொசு அடிக்கும் எலக்ட்ரானிக் பேட் எப்படி வேலை செய்கிறது?


தொந்தரவு தரும் கொசுக்கள், ஈக்களை ஒழிக்க சிறப்பாக உதவுகிறது 'எலக்ட்ரிக்கல் பிளை ஸ்வாட்டர்' எனும் எலக்ட்ரானிக் மட்டை. தைவானை சேர்ந்த டிசாவோ ஐ ஷை என்பவர் இதை கண்டுபிடித்தார். 

டென்னிஸ் மட்டை வடிவில் இது இருக்கும். நேர், எதிர் மின்வாய்கள் கம்பிச் சட்டமாக இணைக்கப்பட்டிருக்கும். அதன் எதிர் முனையில் சார்ஜ் வழங்கும் இணைப்பு இருக்கும். பறக்கும் கொசு, ஈ போன்ற பூச்சிகள் கம்பிச்சட்டத்தை உரசும்போது அதன் உடல் இரு மின்வாய்களுக்கு இடையே கடத்தியாக செயல்படுவதால் மின்பொறி உருவாகி பூச்சியை பொசுக்கி விடுகிறது.
கொசு மட்டையின் கைப்பிடியில் ரீசார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி இருக்கும். சில மணி நேரங்களுக்கு கொசுக்களை அடிக்க போதுமான சக்தியை பேட்டரி வழங்குகிறது. மனிதர்களுக்கு அபாயம் விளைவிக்காத அளவில் குறைவான மின்சாரமே இந்த மட்டையில் பாய்கிறது.

2. டியூப் இல்லாத டயர்கள், காற்றடைக்கும் டயர்களைவிட சிறந்ததா?

கார், சைக்கிள் உள்ளிட்ட எல்லா வாகனங்களிலும் காற்று அடைக்கப்பட்ட ரப்பர் டியூப் கொண்ட டயர்களே வழக்கமாக பயன்படுத்தப்படுகிறது. டியூப் டயருக்கு உட்புறம், ரிம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். ஆணி போன்ற கூரிய பொருட்கள் டியூப்பில் குத்திவிட்டால், உடனே காற்று வெளியேறிவிடும். 


இதனால் டயரும் காற்று இழந்த பலூன்போல தட்டையாகிவிடும். மிக வேகமாக செல்லும்போது டயர்களும், டியூப்பும் அதிகமாக சூடாவதாலும் டியூப் வெடித்து காற்று வெளியேறலாம். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.

இதற்கு மாற்றாக டியூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் டியூப் கிடையாது. டயர்கள், ரிம் உடன் காற்றுப்புகாத வகையில் இணைக்கப்பட்டு இருப்பதால், உள்ளிருக்கும் காற்று டியூப்பின் இடத்தை அடைத்துக் கொண்டு டயருக்கு வடிவம் தருகிறது. இதனால் டியூப் தேவைப்படுவதில்லை.


இந்த வகை டயர்களில் பஞ்சர் ஏற்படுத்தும் ஆணி போன்ற பொருட்கள் டயரிலேயே அடைத்துக் கொள்ளும் வகையில் இருப்பதால் காற்று எளிதில் வெளியேறுவதில்லை. இதனால் டயர் உடனடியாக தட்டையாவது தடுக்கப்படுவதால் விபத்துகளையும் தடுக்கிறது. எனவே காற்றடைக்கப்பட்ட டயர்களைவிட, டியூப்லெஸ் டயர்கள் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. 

மேலும் இந்த வகை டயர்கள், காற்றடைக்கப்பட்ட டயர்களைவிட எடை குறைவாக இருப்பதால் அதிக எரிபொருள் வீணாவதையும் தடுக்கிறது.

3. நாம் ஏன் கொட்டாவி விடுகிறோம்?

களைப்பாகவும், அசதியாகவும் இருக்கும்போது நாம் அகலமாக வாயைத் திறந்து கொட்டாவி விடுவதை கவனிக்கலாம். உண்மையில் நமது நுரையீரலுக்கு போதிய ஆக்சிஜன் கிடைக்காதபோதுதான் கொட்டாவி ஏற்படுகிறது. உடலுக்கு தேவையான ஆக்சிஜனை பெறுவதற்காக மூளை கட்டளை கொடுப்பதால் வாய் அகலமாக திறக்கப்பட்டு, நிறைய ஆக்சிஜன் உள்ளே இழுக்கப்படுகிறது. இதனால் தேவையான ஆக்சிஜன் பெறப்படுகிறது. 

களைப்பாகவும், அசதியாகவும் இருக்கும்போது நாம் வழக்கம்போல சுவாசிப்பதில்லை. இதனால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுவதாலேயே அப்போது கொட்டாவி வருகிறது.

No comments:

Post a Comment