Labels

rp

Blogging Tips 2017

அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் எதிர்ப்பு

தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் இ.பி.எப். ஓய்வூதியம் ரூ.1000 வழங்குவதை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தப்போவதாக அதிர்ச்சிக்குரிய செய்தி வெளியாகியுள்ளது.ஏற்கெனவே பெற்றுவந்த ஓய்வூதியம் மிகவும் குறைந்ததொகை என்பதற்கா அதனை உயர்த்திக் கொடுக்க வேண்டுமென்று ஓய்வூதியர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
ஆனால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் கொடுக்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை நிறுத்தப்படும் என்ற அறிவிப்பு வேதனை அளிக்கின்றது.இது ஓய்வூதியத்தை படிப்படியாக ஒழிக்க கூடிய நடவடிக்கையின் முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் கவலையுடன் பார்க்கிறது.இதனை முறியடிக்க அனைத்து ஓய்வூதியர்களும் ஒன்றுபட்டு போராட்டக் களத்திற்கு தயாராக வேண்டும் என்றுதமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் மாநிலத் தலைவர் நெ.இல. சீதரன், பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்கள்.

No comments:

Post a comment