Labels

rp

Blogging Tips 2017

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைதேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வுக்கு ஜூன் 9, 10 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: ஜூன்- ஜூலையில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத் தேர்வை எழுத நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது.
இப்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ எழுதியிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத- வருகை புரியாத அனைத்துப் பாடங்களையும் உடனடித் தேர்வில் எழுத விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில், வரும் 9, 10 ஆகிய இரு நாள்களில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

தேர்வுக் கட்டணம் ரூ. 125, சிறப்பு அனுமதி கட்டணம் ரூ. 500, பதிவுக் கட்டணம் ரூ. 50 என மொத்தம் ரூ. 675 செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுக்களை பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment