Labels

rp

Blogging Tips 2017

சென்னையில் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் செப்டம்பர் 22முதல் 25 வரை இயக்கப்பணி.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்கள் இருதய அறுவைசிகிச்சை முடித்து 6 மாத ஓய்வுக்குப்பின்னர் வரும் 22.09.2015 செவ்வாய் முதல் 25.09.2015 வெள்ளி வரையிலான 4 நாட்கள் தங்கியிருந்து இயக்கப்பணியினை கவனிக்க உள்ளார். மேலும் தொடக்கக்கல்வி இயக்குனர், பள்ளிக்கல்வி இயக்குனர்,S.S.A,இயக்குனர், மற்றும் கல்வித்துறை செயலர் ஆகியோர்களை
சந்திக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. அதுசமயம் உரிய அலுவலர்களிடம் முறையிட வேண்டிய கோரிக்கைகள் ,பிரச்சினைகள் ஆகியவற்றினை வட்டார , மாவட்டப்பொறுப்பாளர்கள், 19 ந்தேதிக்குள் நாமக்கல் அலுவலகத்திற்கு வந்து சேருமாறுஅனுப்பி வைக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. அப்பொழுதுதான் அவைகள் தொகுக்கப்பட்டு கோரிக்கைகள் விடுபடாமல் உரிய அலுவலர்களிடம் எடுத்து வைக்க வசதியாக இருக்கும்.எனவே அனைத்து வட்டார மாவட்டச்செயலர்கள் தங்கள் பகுதி ஆசிரியர்கள் பிரச்சிணைகள் குறித்த கோரிக்கைகளை உடன் அனுப்பிவைக்க கோரப்படுகிறது. தகவல் க.செல்வராஜ் ,பொதுசெயலர் (பொறுப்பு)

No comments:

Post a comment