rp

Blogging Tips 2017

மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை : குறைந்தபட்ச பிஎப் பென்ஷன் ரூ.1,000 ரத்து????

 பிஎப் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்சம் ரூ.1,000 பென்ஷன் ரத்து செய்யப்படுவதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிவித்துள்ளது.  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சுமார் 6.5 லட்சம் கோடி தொழிலாளர் நிதியை நிர்வகித்து வருகிறது. இதில் சுமார் 5 கோடி தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவற்றில் குறைந்த சம்பள பிரிவில் உள்ள ஊழியர்கள் அதிகம். ஓய்வு பெற்ற பிறகு இவர்களுக்கு சில நூறு ரூபாய்களே பி.எப் ஓய்வூதியமாக கிடைக்கும். எனவே, இவர்கள் பயன்பெறும் வகையில் வருங்கால வைப்பு நிதி

central govt 6% D.A. ORDER

பள்ளிக்கல்வி - மாணவர்களின் EMIS தகவல்களை 2014/15 ஆம் ஆண்டிற்கு மேம்படுத்துதல் - இலவச பேருந்து பயண ஆட்டைகாக மாணவர்களின் நிகழ்நிலைக்கு உடனடியாக கொண்டு வருதல் - இயக்குநர் செயல்முறைகள்


பள்ளிக்கல்வி - கோடை விடுமுறை முடிந்து 01.06.2015 அன்று அனைத்து பள்ளிகளும் திறக்க வேண்டும் - இயக்குநர் உத்தரவு


என்ஜினீயரிங் படிப்புக்கு 2½ லட்சம் விண்ணப்பம்: மே முதல் வாரம் வினியோகம்

தமிழ்நாட்டில் 570–க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2 லட்சம் பி.இ., பி.டெக் இடங்களை நிரப்ப ஒற்றைசாளர முறையில் பொது கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் இந்த கவுன்சிலிங் நடைபெறும்.இந்த வருடம் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளில் அண்ணா பல்கலை கழக அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 2 லட்சத்து 40 ஆயிரம் விண்ணப்ப படிவங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

நிறைவேற்றப்படாத கோரிக்கைகள் மன அழுத்தத்தில் அரசு அலுவலர், ஆசிரியர்கள் தொடர் இயக்கம் நடத்த ‘ஜியோ’ முடிவு

தமிழக அரசு அலுவலர்கள் - ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் இயக்கம் மேற்கொள்வது என தமிழ்நாடு அனைத்து அரசுஅலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன், தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மைய சங்க மாநிலத் தலைவர் கே.கணேசன், தமிழ்நாடு அரசு ஊழியர்

மாணவர் எதிர்காலம் யார் கையில்?



தமிழ்நாட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டிருக்கிறது. இது உண்மையா? உண்மை போன்ற தோற்றமா? எங்கும் இதே பேச்சாக இருக்கிறது.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வை சுமார் 8.43 லட்சம் பேர் எழுதினர். 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 3,298 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு மையங்களில் முறைகேடுகளைக் கண்காணிக்க பறக்கும் படைகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்வு எழுதும் மாணவர்கள் துண்டுச்சீட்டு வைத்திருத்தல், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டால் 2 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை தேர்வு எழுத முடியாது. இதுதவிர, ஆள் மாறாட்டத்தைத் தடுக்க புகைப்படத்துடன் கூடிய நுழைவுச் சீட்டுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உங்கள் ஆதார் எண்ணை , உங்கள் வாக்காளர் எண்ணுடன் இணைக்க கீழ் கண்ட எளிய வழிமுறையில் இணையம் வழியாக பதிவிடலாம் .



உங்கள் ஆதார் எண்ணை , உங்கள் வாக்காளர் எண்ணுடன் இணைக்க கீழ் கண்ட எளிய வழிமுறையில் இணையம் வழியாக பதிவிடலாம் .

1. http://nvsp.in/
முகவரிக்கு செல்க
2.feed your Aadhar no என்ற பகுதிக்கு செல்க
3.name in Aadhar , epic no , Aadhar number, Mobil no , email id .


மேற்கண்ட தகவலை உள்ளீடு செய்த உடன் registered successfully SMS உங்கள் செல் போனிற்கு வரும் , முடிவடைந்து விட்டது உங்கள் ஆதார் எண் , உங்கள் வாக்காளர் எண்ணுடன் இணைக்கப்பட்டது

மறைந்த பிரபல பாடகர் இசை முரசு நாகூர் ஹனிபா மறைவு-

மிழை தெளிவாக உச்சரித்து ஆண்மை மிளிரும் குரலுடன் பாடியவர்கள் மூன்றே பாடகர்கள்.சீர்காழி கோவிந்தராஜன்,டி.எம்.சௌந்தர்ராஜன்,நாகூர் ஹனிபா..இறுதியாக இந்த வெண்கல குரல் குயிலும் விடை பெற்றுவிட்டது..இஸ்லாமிய பாடல்களை அனைவரும் ரசிக்க வைத்தவர்..எந்த பாடகர் போல பாடினாலும் இவர் குரலில் யாராலும் மேடையில் பாட இயலாது என்பார்கள்!..இவருடன் தமிழ்ப்பாடகர் சகாப்தம் நிறைவுற்றது...A user's photo.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார்


முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 81. சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இவர், எழுத்துலகில் நாட்டின் மிக உயர்ந்த விருதான ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஊருக்கு நூறு பேர், உன்னைப் போல் ஒருவன் உள்ளிட்ட இவருடைய பல்வேறு கதைகள் திரைப்படமாக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை

PUPS,PUMS,பள்ளி தணிக்கை(inspection) படிவங்கள் எக்செல் கோப்பாக

PUPS,PUMS,பள்ளி தணிக்கை(inspection) படிவங்கள் எக்செல் கோப்பாக எளிய விதத்தில் கையாளும் வகையில்அமைக்கப்பட்டுள்ளது.பதிவிறக்கம்( FONT உடன்)  செய்து பயன்படுத்தலாம்.

இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்
கோப்பு தயாரிப்பு-
L.LOUIS.M.A.,M.A.,M.Ed.,M.Phil.,
BT ASSISTANT,PUMMSSCHOOL,
THANDARAMPET UNION.

அனைத்து அவசர உதவிக்கும் நாடு முழுவதும் ஒரே இலவச அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரை

அவசர போலீஸ் உதவி, சாலை விபத்து, தீ விபத்து, உயிர் காக்கும் அவசர மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து அவசர உதவிகளுக்கும் ‘112’ என்ற ஒரே இலவச அழைப்பு எண்ணை பயன்படுத்துமாறு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ பரிந்துரைத்துள்ளது. 

நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகக் கட்டணம் வசூல் சுயநிதிக் கல்லூரிகளை ஆய்வு செய்ய உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து சுயநிதிக் கல்லூரிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யுமாறு சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் எம்.வெங்கட்ராமன் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் தகுதியின் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக ஒரு மருத்துவக் கல்லூரியில் பணம் வசூலிக்கப்படுகிறது. அதனால், கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த தொகையை வசூலிப்பதை ஒழுங்குபடுத்தவும், அதிகமாக பெறப்பட்ட தொகையைத் திரும்ப அளிக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

வெளியூர்களுக்குச் செல்லும் மின் நுகர்வோர் ஓராண்டு வரை முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தலாம்

வெளியூர்களுக்குச் செல்லும் மின் நுகர்வோர் ஓராண்டு வரை முன்கூட்டியே மின் கட்டணம் செலுத்தும் வகையில், மின் விநியோக விதிகளில் திருத்தம் செய்து வரைவு விதிகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மின் நுகர்வோர் ஏதேனும் ஒரு காரணத்துக்காக தங்களது வீடுகளை பூட்டிவிட்டு பல மாதங்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பினால் அவர்களுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருப்பதற்கு இந்தத் திருத்தம் உதவும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போதுள்ள விதிகளின் அடிப்படையில் முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் வசதி இருந்தாலும், நீண்ட நாள்களுக்கு கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
மின் கணக்கீட்டாளர் முதல்முறை வரும்போது வீடு பூட்டியிருந்தால், அவருக்கு முந்தைய மாதத்தின் கட்டணமே நிர்ணயிக்கப்படும். இரண்டாவது முறையாக வீடு பூட்டியிருந்தால், அவர்களது மின் இணைப்பு துண்டிக்கப்படும். மின் நுகர்வோரின் வைப்புத் தொகை இரண்டுமுறை கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்பதால் மின்சார வாரியத்துக்கும் வேறு வழியில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப்போது முன்கூட்டியே நீண்ட நாள்களுக்குக் கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கும் வகையில் மின் விநியோக விதிகளில் திருத்தம் செய்து வரைவு விதிகளை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன் விவரம்:
குறைந்த மின் அழுத்த நுகர்வோர் தங்களது வீடுகளை 2 மாதங்களுக்கும் மேலாக பூட்டிவிட்டு வெளியூர்களுக்குச் செல்ல விரும்பினால், அவர்களிடம் ஓராண்டு வரை கட்டணத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்ள அனுமதிக்கலாம். மின் நுகர்வோரிடம் இருந்து பிரத்யேகமான கோரிக்கைகள் வந்தால் இந்தக் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்கலாம்.
இதற்காக மின் நுகர்வோர் தாங்கள் வெளியூர் செல்வதற்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே, மின் வாரிய அதிகாரிகளிடம் முன்கூட்டியே கட்டணத்தைச் செலுத்துவதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
மின் வாரிய அதிகாரிகள், நுகர்வோரின் கடைசி 15 நாள்கள் மின் பயன்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் குறிப்பிடும் காலத்துக்கு மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். அவர்கள் வெளியூர்களுக்குச் செல்லும் 7 நாள்களுக்கு முன்னதாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் விரைவில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை


தமிழகத்தில் ஏற்கெனவே ஆதார் அட்டை கிடைக்கப் பெற்றவர்களுக்கு அரசு பொது இ-சேவை மையங்களில் ரூ.30 கட்டணத்தில் பிளாஸ்டிக் (பிவிசி) ஆதார் அட்டை வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இதுவரை 4 கோடியே 74 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையின் அடிப்பகுதியில் உள்ள விவரங்களை வெட்டி அதை அடையாள ஆவணமாக பயன்படுத்துமாறு ஆதார் அட்டை வழங்கும் யூஐடிஏஐ நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.

தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியின் பொதுசெயலர் பொறுப்பினை 07.04.2015 முதல் துணைப்பொதுசெயலர் திரு க.செல்வராஜ் கவனிப்பார்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் திருமிகு  செ.முத்துசாமி அவர்கள் தன் உடல்நிலை மேம்பாட்டுக்காக மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஓய்வு எடுக்க வேண்டியதன் அவசியம் கருதி,இயக்கசெயல்பாடுகள் தொய்வின்றி நடைபெறும்வகையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் பொறுப்பினை மாநில துணைப்பொதுச்செயலர் திரு.க.செல்வராஜ் அவர்கள் கூடுதலாக கவனிப்பார் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டயின் பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


துடில்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 6 சதவித அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த உயர்வு, 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: தேர்வானோர் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு


சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 2 தாள்களையும் சேர்த்து 37,472 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு 2 தாள்களிலும் 80,187 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டப் பள்ளிகள், கேந்த்ரிய வித்யாலய பள்ளிகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவதற்கு சி.பி.எஸ்.இ. நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை கற்பிக்க முதல் தாள் தேர்வும்,

பள்ளி, கல்லூரி பாடத் திட்டத்தில் 25% குறைக்க வேண்டும்: கலாம் யோசனை


தொழில்முனைவோர் உருவாக வேண்டும் என்றால் தற்போதுள்ள பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் 25 சதவீதம் குறைக்க வேண்டும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

கும்பகோணத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ‘வளர்ந்த இந்தியாவும், இளைய சமுதாயமும்’ என்ற தலைப்பில் இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு சார்பில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் அப்துல் கலாம் பேசியதாவது: ‘இந்தியா 2020’ என்ற திட்டம், நாட்டை நிலைநிறுத்த வழிவகை செய்யும் திட்டம். அப்படிச் செய்தால் வறுமையில் வாடும் 30 சதவீத மக்களை அதிலிருந்து விடுவித்து, விவசாயம் மற்றும் தொழில் துறை வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும்.

'பிளஸ் டூ மார்க் குறையும்?'- எஸ்எம்எஸ் மூலம் பெற்றோருக்கு நூதனமாக வலை வீசும் தனியார் மருத்துவ கல்லூரிகள்

“பிளஸ் டூ தேர்வில் 2 பாடங்களில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினம். இதனால், மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. எனவே, மருத்துவப் படிப்புக்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளுங்கள்” என்று தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள், மாணவர்களின் பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி நூதன வியாபாரத்தைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் கேள்விகள் கடினமாக இருந்ததாம்.

ஆதார் கார்டு இல்லாதவர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஆதார் கார்டு என்றாலே தமிழகத்தில் பலருக்கு அல்லல் கார்டாகவே தெரிகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்க அழைப்பு விடுத்தபோது மக்கள் மத்தியில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இதற்கு அப்போதைய ஆட்சியாளர்களும், எதிர்கட்சிகளும் வைத்த கோரிக்கையே காரணம். பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்கட்சியினர் ஆதார் கார்டு அவசியமற்றது என்று நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். ஆளுங்கட்சியினரோ ஆதார் கார்டு கட்டாயமல்ல என்றனர். இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆதார் கார்டை பெற விரும்பவில்லை.

ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணையுங்கள்: ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் முன்னாள் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் இறப்புக்கு பின்னர் குடும்ப ஓய்வூதியம் பெறும் வாரிசுகள் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்து, இது தொடர்பான தகவலை ஓய்வூதியம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு

பிளஸ்–2 தேர்வில் கட்ஆப் குறையும் எதிர்பார்ப்பில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு வலைவிரிக்கும் தனியார் கல்லூரிகள்

நடந்து முடிந்த பிளஸ்–2 தேர்வில் வேதியியல் மற்றும் உயிரியல் பாட வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவர்கள் கருத்து கூறினர். இதனால் இந்த பாடங்களில் மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும் என அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.மருத்துவம், பொறியியல் கனவுடன் பிளஸ்–2 தேர்வில் கஷ்டப்பட்டு பல லட்சம் மாணவ, மாணவியர் பாடங்களை படித்தனர்.

மாணவர்களுக்கு 'சீட்' மறுப்பு: நான்கு பள்ளிகள் மீது வழக்கு

 கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்களுக்கு, 'சீட்' கொடுக்க மறுத்த, நான்கு கல்வி நிலையங்கள் மீது, முதன்முறையாக வழக்கு பதிவாகியுள்ளது.
தனியார் பள்ளிகளில், கல்வி உரிமை சட்டத்தில், 1.11 லட்சம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் சுற்றில், 81 ஆயிரத்து 536 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாவது சுற்று, இன்னும்,

ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் மே மாதத்தில் வெளியீடு

பல்வேறு பட்டப் படிப்புகள் குறித்த தெளிவான புரிதலை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பாடத் திட்ட விவரம் சேகரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் அவை இறுதி செய்யப்பட்டு, மே மாதமே அந்த விவரங்களை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் எடுத்து வருகிறது

கணினி ஆசிரியர்கள் 20,000 பணியிடங்கள் நிரப்பாவிடில் தலைமை செயலகம் முற்றுகை

 'இருபதாயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பாவிட்டால், வரும் மே மாதம் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்,” என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்சங்கம் சார்பில், திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலகம் அருகே, ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: 2011ல் சமச்சீர் கல்வியில் கணினி அறிவியல் புத்தகம் 6 முதல் 10ம் வரையுள்ள வகுப்புகளுக்கு வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் ஆன்லைன் ஊதியமுறைக்காக பணம் ஏதும் பெறாமலேயே வேலை முடித்து இன்று ஊதியம் பெற்று வழங்கிவிட்டனர்.



திருவண்ணாமலை மாவட்டத்தில் பல ஒன்றியங்களில் ஆன்லைன் ஊதியமுறைக்காக பணம் ஏதும் பெறாமலேயே வேலை முடித்து இன்று ஊதியம் பெற்று வழங்கிவிட்டனர். ஆனால்... செங்கம் ஒன்றியத்தில்.. வழக்கம் போலவே ஆசிரியர்களின் குறைகளை களைவதற்காக அல்லாமல் அலுவலக செலவினங்களை ஈடுசெய்யவே நாண்கடுக்கு கூட்டம் கூட்டப்பட்டது

அரசு பள்ளிகளில் விடுமுறைக்கு முன்னரே மதிய உணவு கட்.....

பள்ளி வேலை நாட்கள் முடிந்ததால், தமிழகத்தில் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில், மதிய உணவு நிறுத்தப்பட்டு உள்ளது; மாணவ, மாணவியர் பட்டினியுடன் பரீட்சை எழுதும் நிலை ஏற்பட்டு உள்ளது.
அனைத்து குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெற வேண்டும்; சத்துணவுக் குறைவால் குழந்தைகள் மரணம் கூடாது; பசியால் கல்வி தடைபடக் கூடாது என்ற நோக்கங்களுடன், தமிழகத்தில், சத்துணவு மற்றும் மதிய உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

10 லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவு இந்த மாதம் வெளியீடு


ஓசூர், பெடரப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் படத்தொகுப்பு


பிரிட்டனில் இனி தந்தையும் 25 வாரம் மகப்பேறு விடுமுறை எடுக்கலாம்: அரசின் முடிவால் மகிழ்ச்சி பெருக்கில் ஆண்கள்

உலகம் முழுவதும் அரசாங்கங்கள் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது வழக்கமான ஒன்று. இந்த விடுமுறையில் பிரிட்டன் நாடு ஒரு முன்மாதிரி முடிவை எடுத்துள்ளது.


அந்நாட்டில் இனி குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு விடுமுறை அளிப்பது போல, தந்தைக்கும் விடுமுறை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அந்நாட்டில் குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு 50 வார விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இனி வரும் காலங்களில் இந்த விடுமுறையை கணவன், மனைவி இருவரும் சமமாக பிரித்துக்கொள்ளலாம்.

மழலையர் பள்ளி வழக்கு : பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மழலையர் பள்ளிகளை முறைப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வி செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்தில் பதில் தர தலைமை நீதிபதி கவுல், நீதிபதி சிவஞானம் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியை மீது ஆசிட் வீசிய பள்ளி முதல்வர்... சென்னையில் கொடூரம்

சென்னை வளசரவாக்கத்தில் ஆசிரியை மீது அவர் பணிபுரியும் பள்ளியின் முதல்வரே ஆசிட் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிப்பிற்கு ஆளான ஆசிரியையின் பெயர் மஞ்சு சிங் என்பதாகும். இவர் வளசரவாக்கத்தில் உள்ள சியோன் கிட்ஸ் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்

440இல் இருந்த சக்கரை அளவு 30தே நாளில் 240 ஆக ஆன அதிசயம்.

என் தாய்க்கு ஏழு வருடங்களாக சக்கரை நோய் இருந்தது. உண்மையில் சக்கரை நோய் என்பது ஒரு நோய் அல்ல. நமது உடலில் சக்கரையின் அளவு அதிகமானால் வரும் பாதிப்பு. சக்கரையின் அளவை சரி செய்தால் போதும். அதான். அந்த அளவை எப்படி சரி செய்வது. எவ்ளோ இன்சுலின், எவ்ளோ மாத்திரைகள். எத்தினை ஆயிரங்கள், லட்சங்கள் மருந்திற்கு என்று செலவு செய்வது. சரி ஆகவே மாட்டேங்கர்தே.
இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா. இருக்கிறது. என் அம்மாவிற்க்கு இருந்த சுகர் எவ்ளோ தெரியுமா. கேட்டால் ஷாக் ஆய்டுவீங்க. 440. ஒரே மாதத்தில் அது 240 ஆக ஆனது. எப்படி.
தெரிந்து கொள்ள comment டில் உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
H V krishnaprasad
https://www.youtube.com/watch?v=_st5UyNYJZY

2016-17 ல் ப்ளஸ் 1 பாடத்திட்டத்தில் மாற்றம்

பிளஸ் 1 பாடத்திட்டம் 2016-17ம் கல்வி ஆண்டிலும் பிளஸ் 2 பாடத்திட்டம் அதற்கு அடுத்த கல்வி ஆண்டிலும் மாற்றி அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் 10ம் வகுப்பிற்கு பின்னர் பியூசியும் அதைத் தொடர்ந்து பட்டப்படிப்பு என்ற முறையும் கடந்த 1979ம் ஆண்டு வரை அமலில் இருந்தது.
இந்தக் கல்வி முறை 1980ல் மாற்றம் செய்யப்பட்டு பியூசி கல்வி அகற்றப்பட்டது.அதற்குப் பதிலாக எஸ்எஸ்எல்சியை தொடர்ந்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மேல்நிலைக்கல்வி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

10 பாடங்களின் விடைத்தாள் இன்று திருத்தம்: மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கிடைக்குமா?

பிளஸ் 2 தேர்வில், 10 முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தம் இன்று துவங்குகிறது; இப்பணி வரும் 14ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது; கணிதம், விலங்கியல், வேதியியல் தேர்வுகளுக்கு, கருணை மதிப்பெண் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 5ல் துவங்கி, 31ம் தேதி முடிந்தது; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம், 8.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மொழிப்பாடங்கள் மற்றும் முதற்கட்ட முக்கியப் பாடங்களுக்கான திருத்தம், மார்ச் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது.

1986-87 ஆண்டு வரையிலான DTEd சான்று +2 க்கு இணையானது

135 ஆண்டு கால வரலாறு முடிவுக்கு வருகிறது: தந்தியை தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா

தந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர் வரலாறு முடிவுக்கு வருகிறது. நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக வழக்கொழிந்தது. தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை கைவிட்டனர். இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு

திருவாளர் ச.அப்துல் மஜீத் அவர்கள் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

ஆசிரியர் சங்க மூத்த தலைவரும் ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்காக அரசிடம் சமாதானம் செய்துகொள்ளாமல் ஒரு போராளியாக வாழ்ந்து வந்த  கடலூர் அப்துல் மஜித் அவர்கள் நீண்ட நாட்களாக உடல் நலமின்றி இருந்து இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தோம்

அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த இயக்க ஆசிரியர்குடும்பத்தார்க்கும், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்
                                        
                                    செ.முத்துசாமி-Ex.MLC    மற்றும்   மாநில நிர்வாகிகள்
                                                          தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 

ஒரு ஜிபி 3ஜி சேவை ரூ.68 க்கு (செல்லுபடி காலம் 10 நாட்கள்)கிடைக்கும்: பி.எஸ்.என்.எல் அறிவிப்பு

ரூ.68 செலுத்தி ஒரு ஜிபி 3ஜி இணையதள பெறலாம் என்று பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பிஎஸ்என்எல்லின் சென்னை தொலைத்தொடர்பு வட்டம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் 3ஜி டேட்டா எஸ்டிவி எனப்படும் சிறப்புவிலை கட்டண சேவையை பிரபலப்படுத்த குறைந்த விலையில் 3 ஜி சேவைகளை வழங்க முடிவெடுத்துள்ளது.

கணினி பயிற்றுநர்கள் 503 பேர் பணி நியமனம் :

முன்னுரிமைஅடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 133 பேரைத் தவிர மீதமுள்ளவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற இணையவழி கலந்தாய்வில்503 கணினிபயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை வழங்கப்பட்டது.உயர் நீதிமன்ற தடை உத்தரவு காரணமாக, 133 பேருக்கான பணி நியமன ஆணை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பாலியல் பிரச்னைதடுக்க விதிமுறை சுற்றறிக்கை வெளியீடு

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகளைத் தடுக்க, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ., வாரியம் உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, பள்ளிகளில், பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் குழு அமைக்க வேண்டும்.
அதில், பள்ளி முதல்வர், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, ஒரு மாணவர், ஒரு மாணவி, ஆசி ரியர் அல்லாத பள்ளியின் அலுவலர் ஒருவர் இடம்பெற வேண்டும்.பள்ளி வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

சிறப்பாசிரியர் கோரிக்கை-போட்டி தேர்வை ரத்து செய்ய அரசு மறுப்பு

'குழப்பமான பாடத்திட்டம் கொண்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, தமிழக அரசு அறிவித்துள்ளதால், கலை, ஓவியம், தையல் மற்றும் இசைப் பிரிவு ஆசிரியர்கள், கவலை அடைந்துள்ளனர்.
பணி நிரந்தரம் தமிழக பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர சிறப்பாசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு சிறப்பாசிரியர்களான ஓவியம், கலை, தையல் மற்றும் இசைப் பிரிவில் பணியாற்றுவோருக்கு, 10ம் வகுப்பை கல்வித் தகுதியாகக் கொண்டு போட்டித் தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
இதற்கான பாடத்திட்டத்தை, தமிழக கல்வியியல் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தயாரித்து, அரசின் ஒப்புதலுடன், கடந்த ஜனவரியில் வெளியிட்டது. 

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு:14 சதவீத ஆசிரியர்கள் தேர்ச்சி

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வின் (CTET-2015)முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி 988 மையங்களில் 96 நகரங்களில் CTET-2015 தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 6.77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 13.53 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களின் விகிதம், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.
சிடிஇடி தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம்

பிஎச்டி. முடித்திருந்தாலும் ‘SET’ அல்லது ‘NET’ தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் ஓர் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக, 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தகுதித்தேர்வில் தேர்ச்சி தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் அரசு கலை கல்லூரிகளில் 1,093 உதவி பேராசிரியர் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உட்பட
பல்வேறு பாடப்பிரிவுகளில்

ஓய்வு ஊதியம் எளிதாக பெற.... இந்த 'டீடெய்ல்ஸ்' மட்டும் கொடுங்க, போதும்!

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஓய்வு ஊதியம் பெறுவதை எளிதாக்குவதற்காக புதிய தகவல்களை இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நிதித்துறை முதன்மைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ‘பென்ஷன் பைலர் ஸ்கீம்'' என்ற திட்டத்தின் கீழ் ஓய்வு ஊதியம் மற்றும் குடும்ப ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் வாழ்வுச் சான்று, வேலையில் சேர்ந்த சான்று,

web stats

web stats