Labels

rp

Blogging Tips 2017

7.42 லட்சம் மாணவர்கள் 'மிஸ்சிங்'

லக்னோ:உலகிலேயே மிகப் பெரிய அளவிலான பள்ளித் தேர்வு முறை, உத்தர பிரதேசத்தில் தான் நடக்கிறது. இந்த ஆண்டு, 10 வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள், ஆன்லைன் மூலமாக பெறப்பட்டு, அதை உறுதிப்படுத்த ஆசிரியர்களுக்கு, 'மொபைல் ஆப்ஸ்' அறிமுகம் செய்யப்பட்டது
. தேர்வை எழுத, 68 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். மாநிலத்தில், 11 ஆயிரத்து, 667 மையங்களில், நேற்று முன்தினம் தேர்வு தொடங்கியது. முறைகேடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையை அடுத்து, பிளஸ் ௨ தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த, 2.88 லட்சம் பேரும், 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த, 4.54 லட்சம் பேரும், முதல் நாள் நடந்த தேர்வுக்கு வரவில்லை.போலி பெயரில் விண்ணப்பித்தவர்கள், நடவடிக்கை பாயும் என்ற பயத்தில் வரவில்லை என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment