Labels

rp

Blogging Tips 2017

மாணவர்களை கொடுமைப்படுத்தும் ஆசிரியர்கள்: தகாத வார்த்தை கூறி திட்டுவதாக புகார்

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் அரசு பள்ளியில் சக மாணவர்களை கொண்டு அடிக்க வைத்து, தகாத வார்த்தையுடன் ஜாதியை கூறி திட்டுவதாக 
ஆசிரியர்கள் மீது மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.திருத்தங்கல் எஸ்.ஆர்.என். அரசு மேல்நிலை பள்ளி பிளஸ் 1 வணிகவியல் பிரிவு மாணவர்கள் பால்பாண்டி, ஜான்சன், தருண் குமார், மகேஷ்வரன், தங்கேஷ்வரன், அழகுராஜா ஆகியோர் நேற்று விருதுநகரில் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்து, பள்ளி ஆசிரியர்கள் மூன்று பேர் தரக்குறைவான தகாத வார்த்தைகளால், ஜாதியை கூறி திட்டுவதாக புகார் கூறினர்.

கல்வீச்சுமாணவர்கள் கூறுகையில்,' பெண்கள் பள்ளியில் பயிலும் மாணவி மீது யாரோ கல்லெறிந்ததில் காயம் ஏற்பட்டது. இது காலையில் நடந்தது. மதியம் விளையாட சென்ற எங்களை நீங்கள் தான் கல்லெறிந்தீர்கள் என கூறி பெற்றோரை அழைத்து வரக்கூறினார். மேலும் தமிழ் ஆசிரியரை திட்டுவதாக கூறி பிளஸ்2 வகுப்பறைக்குள் அழைத்து சென்று அந்த மாணவர்களை கொண்டு அடிக்க வைத்தனர்.
பணம் வசூல்தேர்வில் அடுத்தவரை பார்த்து எழுதினால் 'உன் மனைவியை திருமணத்திற்கு பின் பார்க்க கொடுப்பாயா' என கேட்கின்றனர். 
பள்ளியில் மூன்று நாட்கள் நடந்த என்.எஸ்.எஸ்.முகாமை பத்து நாட்கள் நடந்ததாக சி.இ.ஓ.,விடம் கூற சொல்லி வற்புறுத்துகின்றனர். ஆசிரியரின் டூவீலர் சீட் கிழிந்ததற்கு அனைத்து மாணவர்
களிடம் பணம் வசூல் செய்தனர். கேட்டால் பெயிலாக்கி விடுவதாக கூறுகின்றனர். இதனால் பள்ளி செல்வதற்கு பயமாக உள்ளது, 
என்றனர்.பள்ளி தலைமை ஆசிரியர் டேவிட்,“மாணவி மீது கல்லெறிந்ததற்கு பெற்றோரை அழைத்து வருவதற்கு கூறியிருந்தேன். அவர்கள் விருதுநகர் வந்துள்ளனர். என்.எஸ்.எஸ்.,முகாம் போன்றவைகள் ஏற்கனவே நடந்து முடிந்தது. மாணவர்களை சக மாணவர்களை வைத்து அடிக்க சொல்வது போன்ற சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. மாணவர்களை செய்த தவறுகளை மறைக்கவே இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். பள்ளியில் வந்து விசாரித்தால் உண்மை தெரியும், ”என்றார்.
விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் ராமச்சந்திரன், “இது குறித்து திங்கள் கிழமை பள்ளியில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், ”என்றார்.

No comments:

Post a comment