Labels

rp

Blogging Tips 2017

ஜாக்டோவுக்கு தோல்வியா-? தடுமாற்றமா? ஓர் ஆய்வு

# இன்று ஜேக்டோ தடுமாறி நிற்கிறது. துணிந்து முடிவு எடுக்காததற்கு காரணம் தலைவர்கள் அல்ல...
# ஜேக்டோவிலிருந்து சில நாட்கள் முன்பு விலகிச் சென்று (காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்) போராடிய சகோதரர்கள் இன்று களத்திலிருந்து வெளியேறியள்ளனர்.
‪#‎காரணம்‬...
ஒரே காரணம் தான்...உணர்வில்லா ஆசிரியர்கள் தான்...
# தன்னெழுச்சியாக நடைபெற்றிருக்க வேண்டிய போராட்டங்கள், உணர்வுகள் போன்றவை இங்கே தட்டி, தட்டி எழுப்பினாலும் மீண்டும் மீண்டும் முடங்கிவிட்டன.

# ஒன்றுபட்ட ஜேக்டோவின் மறியலில் கூட 50 சதவீதத்தை நம்மால் தாண்ட முடியவில்லை...
# தனியாக களம் இறங்கியவர்கள் தங்கள் சொந்த உறுப்பினர்களை பங்கேற்கச் செய்ய முடியாத சூழல்...
# இயக்கங்கள் களங்களை ஏற்படுத்திக் கொடுத்தும், பல்வேறு காரணங்களால் நாம் தான் அவற்றை தோல்வியடையச் செய்து, நமக்கு நாமே குழி தோண்டிக் கொண்டோம்...
# தோல்விகளை சமாதானப்படுத்திக் கொண்டோமே தவிர, எந்த ஒரு இடத்திலும் முழுமையான வெற்றியை தொட முடியாமைக்கு காரணம் உணர்வுகள் குறைந்து, சுயநலம் அதிகமாகிவிட்டது தான்...
# இதையெல்லாம் விட முக்கியமான காரணம், புதிதாக தோன்றிய சில அமைப்புகள், இடைநிலை ஆசிரியன், CPS ஆசிரியன், தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் என சங்கத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக, வேற்றுமை உணர்வை விதைத்து, வளர்த்து ஆசிரியர்களிடையே கடும் பேதங்களையும், மன ரீதியிலான பிரிவினையையும் உண்டாக்கியுள்ளனர்.
# ஒரு செயலின் முடிவிற்கு உண்மையான காரணத்தை ஆராயாமல், அவன் பழைய ஆள், அவன் வசதியானவன், அவனுக்கு வயதாகிவிட்டது போன்ற துஷ்ட பிரச்சாரங்கள் திட்டமிட்டு தூண்டிவிடப்படுகின்றன.
# இது ஆசிரிய சமுதாயத்தின் ஒற்றுமைக்கும், வெற்றிக்கும் அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி...!!!
# காத்திருப்போம்... ஒற்றுமையை விதைப்போம்... ஒன்றுபட்டு போராடுவோம்... தாமதமானாலும், வெற்றயை அடைவோம்...!!!

No comments:

Post a Comment