Labels

rp

Blogging Tips 2017

தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?

சென்னை: தமிழகம் உட்பட, ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல், மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு, சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான
ஆயத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டு உள்ளது.இந்திய தலைமை தேர்தல் கமிஷனர், ஐந்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று, தேர்தல் ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தார்.இந்த மாநிலங்களுக்கு, கடந்த 2011ல், சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த ஆண்டு தேர்தல் அறிவிப்பு, மார்ச் 1ம் தேதி வெளியிடப்பட்டது. அதேபோல் இந்த முறையும், தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, 'மார்ச் 2 அல்லது 3ல், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment