பல பள்ளிகளில் கடந்த 3 கல்வியாண்டிற்கு முன் பதியப்பட்ட மாணவ, மாணவியர்களின் விபரம் தற்போதைய EMIS இணையப் பக்கத்தில் இல்லாமல் உள்ளது.
3 கல்வியாண்டிற்கு முந்தைய பதிவுகள் அனைத்தும் இணைய வழியில் நேரடியாக பதிவேற்றப்படாமல் கணினியில் மட்டுமே (OFFLINE) பதியப்பட்டது.
தற்சமயம் அவ்விபரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதில் பல மாணவர்களின் பதிவுகள் விடுபட்டுள்ளது. இவை அனைத்தும் தற்காலிகக் குழுமத்தில் (POOL) உள்ளன. அவை முறையான வகுப்புகளில் மாற்றிப் பதிவிட பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
எனவே தற்சமயம்,
அ:
I II III வகுப்பு மாணவர்களைப் பதிவேற்றல்,
ஆ:
அனைத்து வகுப்பிலும் பள்ளியைவிட்டு நீங்கிய / மாற்றலான மாணவர்களை பதிவிலிருந்து நீக்குதல்
உள்ளிட்ட பணிகளை மட்டும் மேற்கொள்ளவும்.
இதர வகுப்பின் புதிய / நேரடிச் சேர்க்கையை "ஆ:"-வில் குறிப்பிட்டுள்ள பணி மாநிலம் முழுமையும் நிறைவடைந்த பின்னர் தான் மேற்கொள்ளும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுப் பள்ளியில் இருந்து வந்த மாணவர்களை அப்பள்ளியின் இணையப் பக்கத்தில் விடுவிக்கப்பட்ட (Transfer) பின்பே நம் பள்ளியின் பக்கத்தில் சேர்க்க (Admission) இயலும்.
மாணவனை நீக்க / திருத்தம் மேற்கொள்ள:
தலைப்புப் பட்டியில் Child Detail List-ஐத் தேர்வு செய்க.
நீக்க/திருத்த வேண்டிய வகுப்பு மாணவர் எண்ணிக்கையைச் சொடுக்கவும்
வரும் மாணவர் பட்டியலில் திருத்த/நீக்க உள்ள மாணவர் பெயரைத் தெரிவு செய்க
(நீக்கவுள்ள மாணவரின் EMIS எண்ணைக் குறித்துக் கொள்ளவும்)
திருத்தம் மேற்கொள்ள,
தலைப்புப் பட்டியில் உள்ள Update Child Detail-ஐச் சொடுக்கவும்.
நீக்கம் செய்ய,
மாணவனின் தகவல் பக்கத்தின் இறுதியில் உள்ள Tranfer-ஐச் சொடுக்கவும்.
நீக்கம் செய்வோருக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி பதிவிட்டாக வேண்டும்.
No comments:
Post a comment