Labels

rp

Blogging Tips 2017

சமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில்மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதோடு, கற்பித்தல்முறைகளில் புதியஉத்திகள்பின்பற்றப்படுகின்றனஎன்று

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர்கல்விபாடத்திட்டத்தில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என்றபத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்றமதுரைக்கிளை தாமாகவேமுன்வந்துவழக்காகஎடுத்துக்கொண்டது
.

இந்த வழக்கு ஏற்கெனவேவிசாரணைக்குவந்தபோது, பள்ளிக் கல்வித்துறைஇயக்குநர் பதிலளிக்கநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிபதிகள் ஏ. செல்வம், பி. கலையரசன் ஆகியோர்அடங்கிய அமர்வின்முன்பு, இந்தவழக்குபுதன்கிழமைவிசாரணைக்குவந்தது. அப்போது, பள்ளிக்கல்வித் துறைஇயக்குநர் எஸ். கண்ணப்பனின்பதில் மனுதாக்கல்செய்யப்பட்டது.

அதில், ஆதாரமற்றதகவல்களின் அடிப்படையில்செய்தி வெளியாகியுள்ளது. 1 முதல்9 ஆம் வகுப்பு வரைமுப்பருவத்தேர்வு முறைஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள்தேர்வு நேரத்தில்சந்திக்கும் மன அழுத்தம்உள்ளிட்டவைகுறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-2010ஆம்கல்வியாண்டில் 1 முதல்10ஆம்வகுப்பு வரையிலானபாடத்திட்டம்மாற்றிஅமைக்கப்பட்டது. இந்தப்பாடத்திட்டம் கல்விஆராய்ச்சிமற்றும் பயிற்சிக்கானதேசியகவுன்சிலின் நிபுணர்கள்மூலம் உருவாக்கப்பட்டது.

சமுத்துவசமுதாயம், பேரிடர்மேலாண்மை, சுயஒழுக்கம்உள்ளிட்ட பல்வேறுஒழுக்கநெறிகளைஉள்ளடக்கியது. இதுதவிர, 9 மற்றும்10 ஆம் வகுப்புமாணவர்களுக்கு ஒலி, ஒளிகுறுந்தகடுகள் மூலம்கற்பித்தல்வகுப்புகள்நடத்தப்படுகின்றன. இதன் மூலம், 15 லட்சம்மாணவர்கள்பயனடைந்துள்ளனர். மேலும், 3 முதல் 8ஆம் வகுப்புவரையிலானமாணவர்களுக்கு ஆங்கிலப்பாடங்களை ஒலி குறுந்தகடுகள்மூலம்கற்பிக்க முடிவுசெய்துள்ளோம். இதுவரை3 முதல் 5ஆம் வகுப்பு வரைஇந்தத்திட்டம்செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தகுறுந்தகடுகளுக்கானமொழிபெயர்ப்புப்பணி 240 ஆசிரியர்களைக்கொண்டுசெய்யப்பட்டுள்ளது.

காது கேட்காத, வாய் பேசமுடியாதமாற்றுத்திறனாளிமாணவர்களுக்கு சைகைமொழியில்கற்பித்தலுக்கானசோதனைமுயற்சி திண்டுக்கல்மாவட்டத்தில்அறிமுகம்செய்யப்பட்டுள்ளது.                                                                   தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி கல்விகற்பிப்பதில் தமிழகஅரசுமுன்னோடியாகத் திகழ்கிறது. மாணவர்களுக்கு சிறந்தகல்வியைவழங்குவதற்காகஆசிரியர்களுக்கும்அவ்வப்போது பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன.   மேலும்,                                                                                               மாணவர்களுக்குஇலவசமடிக்கணினி, சீருடைஉள்ளிட்ட 16 விதமானஉதவிகளை அரசுவழங்குகிறது. இந்தஉதவிக்கு 2015-2016 வரை ரூ. 3 ஆயிரத்து45 கோடி ஒதுக்கப்பட்டது. மாணவர்கள் உதவிக்கான நிதிஒவ்வொருஆண்டும்உயர்த்தப்படுகிறது. இவற்றை கண்காணிக்கமாவட்டவாரியாக தனிஅலுவலர்கள்நியமிக்கப்பட்டுள்ளனர்.

      கல்வி தரத்தை மேம்படுத்தஅரசுநடவடிக்கை எடுத்துவருவதால், இந்தமனுவைத்தள்ளுபடி செய்யவேண்டும்என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதைஏற்றுக்கொண்டநீதிபதிகள், தமிழகத்தில் கல்வித் தரத்தைமேம்படுத்தமேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளைதொடர்ந்துசெயல்படுத்தஉத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a comment