Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வீழ்ச்சி : 'பூமாராங்'காக மாறும் ஆர்.டி.இ., சட்டம்

 ஆர்.டி.இ., சட்டம் அரசுக்கு 'பூமாராங்'காக மாறியுள்ளது. அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறையும் அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.ஏழை குடும்பத்தின் பிள்ளைகளுக்கு, தரமான கல்வி கிடைக்க வேண்டும். பணமில்லாததால், கல்வி பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில், ஆறு ஆண்டுகளுக்கு முன், கட்டாய கல்வி உரிமை சட்டம் - ஆர்.டி.இ., சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.

இச்சட்டத்தின் கீழ், ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், தனியார் பள்ளிகளில், 25 சீட்கள் வழங்குவது கட்டாய மாக்கப்பட்டது. இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே செலுத்துகிறது.
ஆர்.டி.இ., சட்டம் அமலுக்கு வந்த பின், அரசு பள்ளிகளுக்கு பதிலாக, தனியார் பள்ளிகளில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க, பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை, ஆங்கில மோகத்தால், தனியார் பள்ளிகளுக்கு மாற்றிக்கொள்கின்றனர். இதனால் அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை குறைந்து, தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கிடுகிடு என உயர்கிறது.
அரசு பள்ளிகளுக்கு மட்டுமின்றி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், மாணவர் சேர்க்கையில் பின்னடைவை சந்தித்துள்ளன. நடப்பு கல்வியாண்டில், 85 ஆயிரம் மாணவர்கள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளனர்.

கடந்த, 2016 - 17ம் கல்வியாண்டில், முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான, அரசு நிதியுதவி பெறாத, தனியார் பள்ளிகளில், 38.93 லட்சம் மாணவர்கள் இருந்தனர். அரசு பள்ளிகளில், 46.50 லட்சம் மாணவர்கள் இருந்தனர்.
அரசு - தனியார் பள்ளிகளுக்கு இடையிலான வித்தியாசம் வெறும், 7.57 லட்சமாக இருந்தது. ஆனால், 2006 - 07ல், அரசு பள்ளிகளில், 63.31 லட்சம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில், 23.8 லட்சம் மாணவர்கள் இருந்தனர்.
கடந்த, 11 ஆண்டுகளுக்கு முன், அரசு - தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கையிலான வித்தியாசம், 39.51 லட்சமாக இருந்தது. தற்போது மீண்டும் அதே சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதே சூழ்நிலை தொடர்ந்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில், தனியார் பள்ளிகளில் படிப்பவர்களே அதிக அளவில் இருப்பர்.
அரசு பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என, கல்வித்துறை அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஆர்.டி.இ., சட்ட அஸ்திரத்தை பயன்படுத்தி, தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கு, அரசு மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. இந்த சட்டத்தின் கீழ், மாணவர்களை, தனியார் நிர்வாகங்கள் இலவசமாக சேர்த்துக்கொள்வதில்லை.
மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே செலுத்துகிறது. இந்த தொகையை, அரசு பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, கல்வி தரத்தை உயர்த்தினால், மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் கல்வி கற்க, ஆர்வமாக முன் வருவர்.
இத்துடன் அரசு பள்ளிகளில், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு கண்டால், சூழ்நிலை மாறும் என கல்வி வல்லுனர்கள் 
அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment


web stats

web stats