Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. 
தமிழக அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் சிறப்பாசிரியர்கள்,பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


 இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணைநடத்தி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், 'பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாதம் தோறும், 25 முதல், 30ம் தேதிக்குள், பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மின்னணு முறையில் பெற்று, 5ம் தேதிக்குள் வழங்கி விட்டு, அறிக்கை தர வேண்டும். 'தாமதமாக சம்பளம்வழங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 comment:

  1. எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க பள்ளி தலைமை ஆசிரியர் பரிந்துரைத்த படிவங்கள் அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டாலும் அரசு கருவூலங்கள் அதை மேலும் சில நாட்கள் அரசு ஆணைப்படி உள்ளதா என்பதை திரும்பத் திரும்ப சரிபார்ப்பதிலேயே காலம்தாழ்த்துவார்கள். இன்னும் சொல்லப்போனால் பள்ளியின் அம்மினிட்டி (amenity fund) தொகையிலிருந்தே பகுதிநேர ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கலாம் என்று அரசு ஆணை இருந்தும் சரியாக சம்பளம் பெறமுடியாத சூழ்நிலை இன்றளவும் தொடருகிறது. 1986 இல் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியரான எனக்கு வருடத்திற்கு ஒருமுறை சம்பளம் வரும். 1987 இல் வேலையை தூக்கியெறிந்துவிட்டு வெளியில்வந்ததால் தனியார் துறையில் பணியாற்றி பல நாடு சுற்றிவந்து சர்வதேச அளவிலான அனுபவத்தைப் பெறமுடிந்தது. நன்றிகளுடன் கோகி என்னும் கோபாலகிருஷ்ணன்-ரேடியோ மார்கோனி.

    ReplyDelete


web stats

web stats