தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதமாக உள்ளது. மாணவிகள் 94.1 சதவீதமும், மாணவர்கள் 87.7 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் அடிப்படையில் 97 சதவீதம் தேர்ச்சியுடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. 96.3 சதவீதத்துடன் ஈரோடு மாவட்டம் 2வது இடத்திலும், 96.1 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் 3வது இடத்திலும் உள்ளன. 1907 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment