Labels

rp

Blogging Tips 2017

அரசாணை-145 -அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள டிட்டோ-ஜாக் கூட்டத்தை கூட்ட நடவடிக்கை-செ.மு அமெரிக்காவிலிருந்து

அரசாணை 145 ன்படி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் செயல்படும் வளாகத்தில் இயங்கும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளை அப்பள்ளிகளோடு  இணைத்து, அதன் தலைமையாசிரியர் தொடக்க நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகிக்கும் அரசின் முடிவை  அடுத்து செய்யப்பட வேண்டிய செயல்பாடுகள் குறித்து தொடக்கக் கல்வித் துறையின் சங்கங்கள் அடங்கிய டிட்டோஜாக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்குமாறு நமது மாநில தலைவர் திரு செ. முத்துசாமிEX.MLC அய்யா  அவர்கள் அமெரிக்காவில் இருந்து நமது பொதுச்செயலாளர் திரு.செல்வராஜ், பொருளாளர் திரு ரக்க்ஷித் ஆகியோருடன் தொடர்பு கொண்டது,,,,
 மட்டுமல்லாமல் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர்  திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களிடமும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு ரங்கராஜன் அவர்களிடமும், தமிழக ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு. வின்சென்ட் பால்ராஜ் அவர்களிடமும், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் திரு. தாஸ் அவர்களிடமும் இன்று மாலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்... டிட்டோஜாக் கூட்டம் கூட்டப்பட வேண்டியது அவசியம் என்றும் அதன் மூலம்  அரசாணை 145 ந்படி அரசின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கலந்தாலோசனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இது சார்ந்த தொடர் நடவடிக்கைகளை மாநில பொதுச்செயலாளர் திரு. செல்வராஜ் அவர்கள் எடுத்து வருகிறார் என்பதை தகவலுக்கு தெரிவித்து கொள்கிறோம்......
தகவல் 
கே.பி.ரக்‌ஷித்
மாநிலப்பொருளாளர்.

No comments:

Post a Comment