Labels

rp

Blogging Tips 2017

பள்ளிக்கல்வி பாடத்திட்டம் -3, 4, 5 மற்றும் 8 - ஆம் வகுப்பு பாடத்திட்டம் மாற்றம் 2019-2020 - ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துதல் - ஆணை.

SCERT - 2 Days Computer Training for Govt School Teachers (15.03.2019 to 16.03.2019 )

அரசு ஊழியருக்கு துறை தேர்வுகள் அறிவிப்பு

சென்னை:அரசு ஊழியர்களின், பதவி உயர்வுக்கான துறை தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழக அரசின், பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், துறை தேர்வுகள் வழியாக, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு பெறுவர். நடப்பு ஆண்டிற்கான துறை தேர்வுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நேற்று அறிவித்துள்ளது.இந்த தேர்வுகள், மே, 24 முதல், 31 வரை தேர்வாணையத்தால் நடத்தப்படும். தேர்வில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள், தங்களின் விண்ணப்பங்களை, ஏப்ரல், 6க்குள் சமர்ப்பிக்க வேண்டும். துறை தேர்வுக்கான பாட திட்டம், விதிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட விபரங்களை ,www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

நடவடிக்கைகளைத் திரும்ப பெற வேண்டும்! -தமிழகம் முழுவதும் மீண்டும் ஆசிரியர்கள் போராட்டம்!

தமிழகத்தில் ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களுடைய கோரிக்கைகள்
 நிரந்தரமான தீர்வுகளை நோக்கி இன்னும் நகர்ந்தபாடில்லை.
தமிழகத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், கடந்த ஜனவரி மாதத்தில் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 8 நாள்கள் தொடர் வேலை நிறுத்தம், சாலை மறியல் போராட்டங்களை  முன்வைத்தனர். பள்ளித் தேர்வுகளைக் காரணம் காட்டி அரசுத் தரப்பில் கேட்டுக்கொண்டதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.

TRB - பாலிடெக்னிக் தேர்வு ரத்து செல்லாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.

2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

தமிழகத்தில் 4 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் :

நாடு முழுவதும் 60 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை மற்றும் சிவகங்கை ஆகிய 4 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைய உள்ளது.

-01.01.2019 தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் பேனல் தயாரிப்பது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்.....


ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி attendance app ல் வருகையைப் பதிவு செய்ய வேண்டும்.

      பள்ளிப் பார்வை என அலுவலகத்தில் எழுதி வைத்து விட்டு ஆசிரியப் பயிற்றுநர்கள் தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் சென்று விடுவதாக எழுந்த புகாரை அடுத்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் இனி ஆன்லைனில் உள்ள ஆப்பில்  தான் பதிவு செய்ய வேண்டும் ...
 தான் செல்வதாக எழுதி வைத்து விட்டுச் செல்லும் பள்ளிகளிலிருந்து அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் வருகையை தனது மொபைலில் பதிவு செய்ய வேண்டும் எனக் கோரப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அவ்வாறு பதிவு செய்யும் போது அப்பள்ளி அமைந்திருக்கும் location உயர் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது.

எனவே இனி பள்ளிப் பார்வை என எழுதி வைத்து விட்டு தன் சொந்த வேலைகளைப் பார்க்கச் செல்வது பெருமளவு குறையும் என அரசு எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது....

மார்ச் 11 - புதுக்கோட்டை,விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

 புதுக்கோட்டை : திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு வரும் மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. 
 விழுப்புரம் : மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழாவையொட்டி மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த்திருவிழா வருகிற 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்திருத்தேர் உற்சவத்தையொட்டி, மார்ச் 11-ஆம் தேதி ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், அந்த தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ, மாணவிகளுக்கு அந்த தேதியில் பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெறுவதாக நிர்ணயிக்கப்பட்டிருந்தால், அந்தத் தேர்வு அன்றைய தேதியிலேயே வழக்கம்போல நடைபெறும். உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 11-ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 27-ஆம் தேதி(சனிக்கிழமை) பணி நாளாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

லோக்சபா தேர்தல் அறிவிப்பு எப்போது? லோக்சபா தேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது

.பதினாறாவது லோக்சபாவின் ஆயுட்காலம் வரும் ஜூன் 3ல் முடிகிறது. அதற்கு முன் புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் 17வது லோக்சபாதேர்தல் தேதி நாளை (மார்ச் 8) அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது. 2014ல் லோக்சபா தேர்தல் மார்ச் 5ல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடந்தது. அப்போது தமிழகத்தில்ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

*தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான CRC மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி அட்டவணை* *23/03/19 சனி primary CRC Meeting.* *25/03/19 சனி middle school HM training at BRC level*

துறைத் தேர்வுகள், மே 2 0192019 மே 24 முதல் 31 வரை நடைபெறவுள்ள துறைத் தேர்வுக்கு 07.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி 06.04.2019

மேலும் விபரங்கள், பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் இணைப்பிற்கும்...


www.tnpsc.gov.in

TNPSC - Departmental Exam - May 2019 Notification Published [ Exam Date : 24.05.2019 TO 31.05.2019 ]*

துறைத் தேர்வுகள், மே 2019


புதிதாக அரசுப் பணிக்கு வந்துள்ளவர்கள் தகுதிகாண் பருவம் முடிக்கவும், பதவி உயர்வு பெறவும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுதல் அவசியம்.


2019 மே 24 முதல் 31 வரை நடைபெறவுள்ள துறைத் தேர்வுக்கு 07.03.2019 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசித் தேதி 06.04.2019


மேலும் விபரங்கள், பாடத்திட்டம், விண்ணப்பிக்கும் இணைப்பிற்கும்...


www.tnpsc.gov.in

SLAS exam will be conducted for the classes IV and VII on 25 th and 26 th March 2019. Selected Primary Middle High and Higher secondary schools.


தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் செ.மு அவர்கள் வேண்டுகோள்


DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - பள்ளிகளில் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் துப்புரவாளர்கள் விவரங்களை உடன் அனுப்ப இயக்குநர் உத்தரவு.

அலுவலக நடைமுறை - கோப்புகளை முழுமையாக கூர்ந்தாய்வு செய்து தேவைப்படும் விவரங்கள் முதல்முறையிலேயே கோரப்பட வேண்டும்!

குறு வள மைய அளவிலான ஒரு நாள் SMC பயிற்சி 08.03.19 அன்று நடைபெறவுள்ளது

இப்பயிற்சியில்
ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் கீழ்க்கண்ட ஆறு உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்

1. ஆசிரியர் - 1
 2. Smc தலைவர் - 1
 3 . SMC துணைத் தலைவர் - 1
  4. பெற்றோர் - 2
   5. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதி  அல்லது SMC பெண் உறுப்பினர்  - 1

மொத்த உறுப்பினர்கள் =  06.

பயிற்சியில் அனைத்து அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை  மேல்நிலைப் பள்ளிகளின் SMC உறுப்பினர்கள் மேற்கண்டவாறு தவறாமல்  கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயத்தப்படுகிறது.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி மார்ச் மாத சம்பளத்துடன் வழங்கப்படும்

இதனால் அரசுக்கு மாதம் 3.60 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

*CRC உயர் தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி அட்டவணை*

தேர்வு பணிக்காலத்தில் மருத்துவ விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் மீண்டும் பணியில் சேர இணைஇயக்குனர் மருத்துவம் அவர்களிடம் மட்டுமே "Fitness Certificate" பெற வேண்டும் - Proceedings.*

அன்பார்ந்த நமது இயக்க மாநில , மாவட்ட, வட்டார பொறுப்பாளர்களே ! நமது இயக்கத்தின் ஆசிரியர்இன போராளி அய்யா செ.முத்துசாமி _EX.MLC அவர்களின் 83 வது பிறந்தநாள் விழாவை இந்த ஆண்டு கொண்டாட திருச்சி மாவட்டம், முசிறி வட்டாரம் வாய்ப்பை பெற்று உள்ளது.உங்கள் அனைவரின் வருகையோடுவிழாவை மகிழ்ச்சியாககொண்டாட காத்து இருக்கிறோம். வருக ! வருக ! இவண் , *கோ.நாகராஜன் , மாநில இளைஞரணி செயலாளர்.* மற்றும் திருச்சி மாவட்ட செயலர்


SSA பள்ளி மானிய நிதியை 30/03/19 க்குள் எடுத்து விடவும்.இல்லையேல் மீண்டும் திரும்ப செலுத்த உத்திரவு

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019

Teachers Recruitment Board  College Road, Chennai-600006

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) - 2019

Dated: 01-03-2019

Chairman

TRB - கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம்

கணினி ஆசிரியர் பணிக்கான தேர்வு : மார்ச் 20 முதல் ஏப். 10 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. http://www.trb.tn.nic.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய ம்கூறியுள்ளது. 

RTI - அரசாணைகள் , செயல்முறைகள் இல்லாத ஒன்றை ஆய்வு அலுவலர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் அரசுப்பள்ளிகளில் செயல்படுத்த அதிகாரம் உண்டு என்பதற்கான அரசாணை இல்லை - RTI

விழுப்புரம் மாவட்டத்திற்கு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் 11-03-2019 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை.

விழுப்புரம் மாவட்டத்திற்கு மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, வரும் 11-03-2019 திங்கட்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை.

அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்திற்கும் விடுமுறை.

பொதுத் தேர்வு வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுகட்ட,

அடுத்த மாதம் 27-04-2019 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் அறிவிப்பு

60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


  • 60 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடி கணினி வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
  • கோபி அருகே உள்ள விளாங்காட்டு பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற வளர்ச்சிபணிகள் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ்-2 தேர்வு முடிந்ததும் சி.ஏ. பட்டய பயிற்சிக்கு 2 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்
  • வரும் திங்கட்கிழமை ஐ.சி. திட்டத்தில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும் என்றும் 9.10.11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு இண்டர் நெட் வசதி செய்து தரப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.பிளஸ்-2 மாணவர்களுக்கு இன்னும் சில தினங்களில் மடிகணினி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்

DSE வட்டாரக் கல்வி அலுவலர் (B.E.O) பணியிடத்துக்கு போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் நிர்ணயம் - அரசாணை


web stats

web stats