Labels

rp

Blogging Tips 2017

எஸ்பிஐ வங்கியில் ரூ.25000 மினிமம் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.

எஸ்பிஐ வாடிக்கையாளர நீங்கள் : இதோ உங்களுக்கு குட் நியூஸ்.!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அது என்னவென்று பார்ப்போம், நீங்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மற்ற வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவித அபராத கட்டணமும் இல்லை.
பின்பு தறபோதைய நிலவரப்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கி ஏஎடிஎம்-களில் பணம் எடுத்து வருகின்றனர். ஆனால் இனிமேல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் Online முறையில் பல்வேறு சான்றிதழ்கள் பெற கட்டணம் மற்றும் ஆவணங்கள்

ஊராட்சி,நகராட்சி,பேரூராட்சி,எம் எல் ஏ எம்,பி,அமைச்சர்,இவர்களில் யார்யார் பச்சைமையில் கையொப்பம் இடலாம்?


புறக்கணிக்கிறது அரசு! - வேதனையில் ஆசிரியர்கள்

ஊதிய முரண்பாடுகளைச் சரிசெய்க... பழைய ஓய்வூதிய முறையை உடனடியாக அமல்படுத்துக!' என்கிற கோஷங்களை முன்வைத்து, தமிழக ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாகப் போராடிவருகின்றனர். இந்தப் பிரச்னைக்குத் தீர்வுகாணும் விதமாகத் தொடர் வேலைநிறுத்தத்தைக் கையில் எடுத்து நிகழ்த்திக் காட்டினாலும், அரசு இதுவரை ஆசிரியர்களின் இந்தக் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வின் குளறுபடிகளால் 1,500-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களின் அரசு வேலைகளை இழக்க உள்ளனர்.
.
மத்திய அரசு, குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை, 2010-ம் ஆண்டு கொண்டுவந்தது.

அரசு பதிவுபெற்ற இன்ஜினியரின் சான்றுடன்தான் இனி.வீடு கட்ட வேண்டும். தமிழகம் முழுவதும் கட்டாயமாகிறது BE -CIVIL படித்தவர்களுக்கு இனி வேலைவாய்ப்பு

EMIS இணைய தளத்தில் ONLINE TC தயாரித்து, பதிவிறக்கம் செய்வது எப்படி?

EMIS இணைய தளத்தில் பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் கொடுத்து உள்ளே செல்லவும்.

Students மெனுவை கிளிக் செய்து, அதில் Transfer என்ற Sub Menu வை தேர்வு  செய்யவும்.

வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

அதில் 5 / 8 ஆம் வகுப்பை தேர்வு செய்து, ஒவ்வொரு மாணவரையும், தனித் தனியாக Transfer செய்து, Common Pool க்கு அனுப்பவும்.

Transfer க்கான காரணம் (5 / 8ஆம் வகுப்பாக இருப்பின்) Terminal Class என்பதை தேர்வு செய்து Transfer செய்யவும்.

மற்ற வகுப்பு மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றால், உரிய காரணத்தை தேர்வு செய்யவும்.

இப்போது Transfer செய்த மாணவர்கள் எமிஸ் இணையதளத்தில் Common Pool ல் இருப்பார்கள்.

இதன் பிறகு Students மெனுவில், Transfer Certificate தேர்வு செய்யவும்.

இதில் வகுப்பு மற்றும் பிரிவு தோன்றும்.

அதில் 5 or 8 ஆம் வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்யவும்.

TC தயார் செய்ய வேண்டிய மாணவரின் வரிசையில் வலது புறம் கடையாக  உள்ள,
Generate TC என்பதை கிளிக் செய்யவும்.

இதில் 11 விவரங்கள் கேட்கப்படும்.

இதை கவனமாக உள்ளீடு செய்து Save கொடுக்கவும்.

தற்போது ஆன்லைன் TC தயார்.

ஆன்லைன் TC யில், பிழைத்திருத்தம் செய்ய இயலாது என்பதால், மாணவரை Transfer செய்யும் முன்பே, விவரங்கள் மற்றும் புகைப்படம் சரி பார்த்த பின் Transfer செய்ய வேண்டும்.

 Transfer செய்த பின், TC தயாரிக்கும் முன், கேட்கப்படும் 11 விவரங்களை பிழையின்றி உள்ளீடு செய்ய வேண்டும்.

Legal Size பச்சைத் தாளில் முன் பக்கம் மற்றும் பின் பக்கத்தில் பிரிண்ட் எடுத்து, தலைமை ஆசிரியர் கையொப்பம், முத்திரை இட்டு வழங்க வேண்டும்.

 TC யில்,இரண்டு பிரிண்ட் எடுத்து, மாணவருக்கு ஒரு பிரதி வழங்கி விட்டு, பள்ளிக்கு ஒரு பிரதி வைத்துக் கொள்வது நல்லது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்குகடும் கட்டுப்பாடுகளுடன் மே 5-ல் நீட் தேர்வு: நாடுமுழுவதும் 15 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் வரும் 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 1.40 லட்சம் பேர் உட்பட நாடுமுழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. நீட் தேர்வுக்கு நாடுமுழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.நாடு முழுவதும் நீட் தேர்வு 154 நகரங்களில் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட 14 நகரங்களில் நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில்நடைபெற உள்ளது.ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் மட்டும் அனைத்து நகரங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.தமிழ் மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு முடிந்தவரை தமிழகத்திலும், கடைசி நேரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அருகில் உள்ள மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.நீட் தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியருக்கு உதவி செய்ய சென்னை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநர் முகமது கனி கூறியதாவது:

தேர்வு மையம் செல்ல ‘மேப்’எங்கள் நிறுவனத்தின் 9952922333, 9445483333 என்ற வாட்ஸ்-அப் எண்களுக்கு மாணவர்கள் தங்களுடைய பெயர், நீட் பதிவு எண், வீட்டு முகவரி, தேர்வு மைய முகவரி, பிறந்த நாள், மொபைல் எண் ஆகியவற்றைப் பதிவு செய்தால் உடனடியாக அவர்களின் தேர்வு மையத்துக்கு, அவர்கள் வசிக்கும் முகவரியிலிருந்து செல்லும் வழிக்கான ‘மேப்’ அனுப்பப்படுகிறது. இந்தப் புதிய சேவை வழக்கம்போல், எந்தவிதக் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது.வசிக்கும் ஊர் இல்லாமல் வேறு ஊர்களுக்கு தேர்வு எழுதச் செல்வதாக இருந்தால், அங்கு செல்ல போக்குவரத்து வசதிகள், பேருந்து, ரயில் கால நேரம் ஆகியவற்றைத் தெரிந்து முதல் நாளே மாணவர்கள் செல்ல வேண்டும்.தங்கும் இடத்திலிருந்து தேர்வு மையம் செல்லும் வழியை அறிந்திருக்க வேண்டும். உதவிக்கு வருபவரிடம் முதல் நாள் தேர்வு மையம் சென்று வரச் சொல்ல வேண்டும். ஒரு தேர்வு மையத்தில் பல அறைகள் இருக்கலாம். எந்த அறையில் உங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை முதல் நாள் மாலைஅல்லது தேர்வு அன்று காலையில் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இயலாத சமயத்தில், தேர்வுக்கு 2 மணி நேரம் முன்னதாகச் சென்று இவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு முகமது கனி தெரிவித்தார்.

விதிமுறைகள்

நீட் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்னதாகவே தேர்வு மையங்கள் திறக்கப்படும். மதியம் 1.30 மணிக்குப் பின்னர் தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை. அதனால், 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று, அவரவர் இருக்கைகளில் அமர்வது நல்லது.ஒவ்வொருவருக்கும் ஓர் இருக்கை ஒதுக்கப்பட்டு, அதில் அவர்களின் தேர்வு பதிவெண் ஒட்டப்பட்டு இருக்கும். அவரவருக்குஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும். 1.30 மணி முதல் 1.45 மணி வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால்டிக்கெட் பரிசீலனை நடைபெறும். அப்போது மாணவர்கள் ஹால்டிக்கெட், போட்டோ ஐடியைத் தர வேண்டும்.ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். 1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 மணி முதல் 2.00 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவுசெய்ய வேண்டும்.தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விடைத்தாள் தொகுப்பில் முன் பக்கம் எத்தனை பக்கங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ, அத்தனை பக்கங்கள் இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும். இல்லை என்றால், அறைக் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்க வேண்டும். வினாத்தாளில் உள்ள குறியீடும் விடைத்தாளில் உள்ள குறியீடும் ஒரே குறியீடுதான் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுத வேண்டும். 5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது. வெளியேறும் முன், விடை பதியப்பட்ட ஓஎம்ஆர் தாளைக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும். தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர்கள் தேர்வு நேரத்தை தொடங்கும்போதும், நடுவிலும், முடியும்போதும் அறிவிப்பார்கள். வருகைப் பதிவுத் தாளில், மாணவர்கள் தங்கள் விரல் ரேகைகளைப் பதிய வேண்டும்.நீட் ஹால்டிக்கெட், விண்ணப்பத்தில் பதிவுசெய்த புகைப்படத்தின் அதே நகல், செல்லத்தக்க போட்டோ அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

அனுமதியில்லாத பொருட்கள்

தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனா ஒன்று தேர்வு மையத்தில் வழங்கப்படும். ஜியோமெட்ரிக் பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்ட எதற்கும் அனுமதி இல்லை. மொபைல் போன், புளூடூத், பென் ட்ரைவ், பேஜர், ஹெல்த் பேண்ட், கை கடிகாரம், கைப்பை, கேமரா, காதணிகள், வளையல்கள், ஆபரணங்கள் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை.

ஆடை கட்டுப்பாடு

மென்மையான நிறத்தில் ஆடை இருக்க வேண்டும். அரைக்கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக் கூடாது. மதச்சார்பான, அதிகம் உடல் மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகத் தேர்வு அறைக்கு வந்து, ஆசிரியைகளின் சோதனைக்கு உள்ளாக வேண்டும். தேர்வு மையத்துக்குள்ளாக ஷூ அணியக் கூடாது.செருப்பு மட்டுமே அனுமதிக்கப்படும். அவையும் ஹை ஹீல்ஸ் உள்ளதாக இருக்கக் கூடாது.

மலைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கருகாமையில் குடியிருப்பு வசதி ஏற்படுத்த திட்ட இயக்குநர் விவரம் கோருதல்

பள்ளிகளில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் ஆன்லைனில் மட்டுமே மாற்றுச் சான்றிதழ்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. EMIS இணையத்தில் பதிவிறக்கம் செய்த மாற்றுச் சான்றிதழில் சீல் வைத்து தலைமை ஆசிரியர் கையொப்பமிட வேண்டும்.EMIS என்ற கல்வி தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் டி.சி வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.

ஆசிரியர் தகுதித் தேர்வு நிறைவு செய்யாதவர்கள் பணி நீக்கம் செய்யலாம் என்ற நீதிமன்ற உத்தரவு நகல்

CLICK HERE TO DOWNLOAD

தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்*

*ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி  சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்,*  தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க அனுமதிக்க கூடாது. 


*அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு கருணை காட்டக் கூடாது.*


தகுதி தேர்வு முடிக்காத ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம். நோட்டீசுக்கு பதிலளிக்க இருவார காலம் அவகாசம் தந்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம். 


*தகுதி தேர்வு எழுதி 60 ஆயிரம் பேர் வேலைக்கு காத்திருக்கும் நிலையில், தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க எந்த காரணமும் இல்லை. 8 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும் தகுதி தேர்வு முடிக்காதவர்களுக்கு கருணை காட்ட வேண்டிய அவசியம் இல்லை”* என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Source: தினத்தந்தி

10ம் வகுப்பு ரிசல்ட்: 95.2 % தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 98.53 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 
மதிப்பெண் விபரங்களை, மாணவர்களின் மொபைல் போன் எண்ணில், எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களிலும், மதிப்பெண்ணை அறிந்து கொள்ளலாம்.மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, தேசிய தகவலியல் மையங்கள், நுாலகங்கள் மற்றும் பள்ளிகளிலும் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்; தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, வரும், 2ம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.தனி தேர்வர்கள், 6ம் தேதி முதல், www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம். பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வை எழுதாதவர்களுக்கும், ஜூன், 14 முதல், 22 வரை, சிறப்பு தேர்வு நடத்தப்படும்.


இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.1 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018 ம் ஆண்டு 94.50 சதவீதமாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

10 ம் வகுப்பு ரிசல்ட் : முதலிடம் திருப்பூர்

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் 98.53 சததவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் :


திருப்பூர் - 98.53 %
ராமநாதபுரம் - 98.48 %
நாமக்கல் - 98.45%
ஈரோடு - 98.41 %
கன்னியாகுமரி - 98.08%
விருதுநகர் - 96.29%
திருநெல்வேலி - 92.99%
தூத்துக்குடி - 95.52 %
சிவகங்கை - 95.68%

அரசுப்பள்ளிகளை-முன்னால் மாணவர் மற்றும் சமூக அமைப்புகள் மூலம் நிதிபெற்று அடிப்படை வசதிகள் மேற்கொள்ள இஅய்க்குனர் உத்திரவு

M.sc computer science and information technology பட்டப்படிப்பினை M.sc computer science கல்வித்தகுதிக்கு இணையானது - பள்ளிக்கல்வி இயக்குநர்

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி ய பள்ளிக் கல்வித்துறை

ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு 2009-ம் ஆண்டு அனைவருக்கும் கட்டாய கல்விச் சட்டத்தைக் கொண்டுவந்தது

அந்த சட்டத்தின் ஒரு அம்சமாக, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியராக பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்பதை கட்டாயப்படுத்தியது\

அதன்அடிப்படையில் 2012-ம் ஆண்டு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அந்த தேர்வில் தேர்ச்சியடையாத ஆசிரியர்களுக்கு, மேலும் 4 ஆண்டுக்கள் ஆசிரியர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது

பிறப்பு, இறப்புகளை பதிவு செய்ய தவறியவர்கள் 1 வருடத்திற்கு மேலாகிவிட்டால் பதிவு செய்ய கோர்ட் உத்தரவு பெறுவதற்கு பதிலாக இனி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பெற வேண்டும்.

கோடை விடுமுறையில் நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

கோடை விடுமுறையில், நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கு, இணையதளம் வாயிலாக பட்டயப்படிப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான அறிவியல் ஆசிரியர்களுக்கு,

தொடக்க நிலை வகுப்பு நேரம் தலைமை ஆசிரியர் முடிவெடுக்கலாம்

பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் பாடவேளை நேரத்தை தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.தமிழக தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள செயல்வழி கற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி முறைகளுக்கான அரசாணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் இந்த திருத்தங்கள் அடிப்படையில் செயல்வழி கற்றல் ஒருங்கிணைக்கப்பட்டு புதிய பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 3ம் வகுப்புகளுக்கு செயல்வழி கற்றல் கற்பித்தல் முறையும், 4ம் வகுப்புக்கு எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் முறையும் பின்பற்றப்படுகிறது.

web stats

web stats