Labels

rp

Blogging Tips 2017

சென்னையில் நடைபெற்ற டிட்டோஜேக் மாநில உயர்மட்டக்குழுக் கூட்ட நிகழ்வுகள்!

இன்றைய டிட்டோஜேக் கூட்டம் எவ்விதத்திலும், ஜாக்டோ ஜியோ முடிவை புறக்கணிக்காது...  ஜாக்டோ ஜியோ போராட்ட நிகழ்வு தொடர்ந்து நடைபெறும்.. அதில் அனைவரும் கலந்து கொள்வர்... ஜாக்டோ ஜியோ மூன்று கட்ட போராட்டங்கள் செப்டம்பர் 24 வரை வடிவமைக்கப்பட்டுள்ளமையால், போராட்டங்கள் அனைத்தும் முடிவுற்ற பின், டிட்டோஜேக் செப்டம்பர் 25 சென்னையில் கூடி அடுத்த கட்ட நிகழ்வுகள் குறித்து ஆலோசித்து அறிவிப்பு வெளியிடும்..

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் மற்றும் இயக்க நிறுவனர் அய்யா செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் அமெரிக்காவில் இருந்து ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

5/9/2019  மாலை ஐந்து முப்பது மணி அளவில் அலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு ஆசிரியர் தின நன்னாளில் தனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை அனைத்து ஆசிரியர்களுக்கும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்நன்னாளில் ஆசிரியர்கள் சிறப்பாக சேவையாற்றி நாட்டை உயர்த்துவதில் பெரும் பங்காற்றி வருகிறார்கள் என்பதில் ஐயமில்லை . மேலும் வருங்கால இந்தியாவை உருவாக்கும் சிற்பிகளை வகுப்பறையில் வடித்தெடுக்கும் ஆசிரியர் பேரினத்தின் இன்றைய அவலங்கள் நிச்சயம் கடந்து போகும் என்றும் தனது வாழ்த்துரையில் தெரிவித்துள்ளார்
தகவல்
கே.பி.ரக்‌ஷித்.
மாநில பொருளாளர்.

டிட்டோஜாக் கூட்டம் கூடி யதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் முத்துசாமி அவர்கள் வரவேற்பு

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு உருவாவதற்கு முன்னர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு அதாவது டிட்டோ ஜாக் கூடி போராட்டங்களை முன்னெடுத்தது. பின்னர் ஒருமித்த கருத்தோடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கங்களுடன் ஜாக்டோ என்ற பெயரில் இணைந்து போராட்டங்களை வடிவமைத்து பங்காற்றியது... அதன்பின்னர் அரசு ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஜாக்டோ ஜியோ*என்ற பதாகையின் கீழ் போராட்டங்களை முன்னெடுத்தது அனைவரும் அறிந்ததே...
 தற்போது உள்ள சூழ்நிலையில் தொடக்கக் கல்வித் துறையை முற்றாக களைந்து அழிக்கும் வகையில் அரசின் செயல்பாடுகளும், அரசாணைகள் வெளிவந்து கொண்டிருக்கும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள தனது செயல்பாடுகளை தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்( டிட்டோஜாக்) முன்னெடுக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்காவில் இருந்து ஐயா முத்துசாமி அவர்கள் தொடக்கக்கல்வி இயக்கங்களின் தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டிட்டோஜாக் கூட்டப்படவேண்டும் என்றும் அதன் அவசியம் குறித்தும் கடந்த வாரம் பேசினார்.. அதன் அடிப்படையில் மாநில பொதுச் செயலாளர் திரு செல்வராசு அவர்கள் தொடர்ந்து தொடக்கக்கல்வி இயக்கங்களைச் சார்ந்த சங்க பிரதிநிதிகளிடம் பேசி வந்தது அனைவருக்கும் தெரிந்ததே... இந்நிலையில் டிட்டோஜாக் கின் இன்றைய கூட்டம் சென்னையில் நடைபெற்றது அதில் நமது இயக்கம் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு சாந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு நமது இயக்க கருத்துக்களை தெரிவித்துள்ளார்.மீண்டும் தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு கூடி முக்கிய முடிவுகளை எடுக்கும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நமது முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பது மனமகிழ்ச்சியை தருகிறது.
 மேலும் பின்லாந்து சென்று திரும்பி வந்துள்ளதமிழக கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை செயலாளர் அவர்களை டிட்டோ ஜாக் சார்பாக அதன் பொறுப்பாளர்கள் கூடி சந்தித்து பேசவேண்டும் என்று தனது அவாவையும் தெரிவித்துள்ளார்...

750PP-பதவி உயர்வு 750 தனி ஊதியம் திருச்சி மண்டல தணிக்கை தடை பொருந்தாது முதல்வர் தனிப்பிரிவு பதில்


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2019-20 ஆம் ஆண்டு - பள்ளி அளவில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு பயிற்சி (Self Defence Training for Girls) செயல்பாட்டிற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் சுற்றறிக்கை - சார்ந்து

SPD PROCEEDINGS: பள்ளிக்கல்வி - ஒருங்ணைந்த பள்ளிக்கல்வி - பயிற்றுநர்கள் ஒன்றிய அளவில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேனிலைப் பள்ளியினை குறுவளமையமாகக் கொண்டு கல்வி மேம்பாட்டுப்பணியினை மேற்கொள்ளுதல் - புதிய அணுகுமுறையினை செயல்படுத்துதல்- அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.

அரசாணை எண் 41 நாள்:29.08.2019-பணியமைப்பு - சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை-அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களாகப் பணிபுரிந்து 01.04.2003 தேதிக்குப் பின்னர் ஊர் நல அலுவலர்கள் / மேற்பார்வையாளர்கள் (நிலை-2), ஆசிரியர்களாக பணி நியமனம் பெற்றவர்கள் - மாத சிறப்பு ஓய்வூதியம் ரூ.2000/- வழங்கி ஆணை வெளியிடப்படுகிறது.

G.O 603 DATE:5/9/2019-Holiday - Holiday for Muharram on 11th September 2019 - Change in the dateof observance of the festival - Orders – Issued.


கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android Mobile App.

இதுதான் கல்வி தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ Android App.

தற்போது சோதனை வடிவில் மட்டுமே.

கீழேஇருக்கும் link-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து உங்கள் கைபேசியிலேயே கல்வி தொலைக்காட்சியை கண்டு மகிழுங்கள்.
https://play.google.com/store/apps/details?id=com.indiamatrix.kalvitv

DSE PROCEEDINGS-வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க மாணவர்களை பள்ளிகளில் வெயிலில் விளையாட வைக்க வேண்டும்

தலைமை ஆசிரியர் என்பதை ' பிரின்ஸ்பால்' ஆக மாற்றுவது குறித்து பள்ளி கல்வித்துறை எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை என பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும் இது ஒரு Fake செய்தி எனவும் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.* *// The New Indian Express //*

அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை இயக்குநர் உத்தரவு.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு / அரசு உதவிபெறும் / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை சார்ந்த பணியாளர்களின் பணிப்பதிவேட்டில் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

CLICK HERE

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி - ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் மாணாக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, இப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்குதல் - ஆணை வெளியிடப்பட்டது - பள்ளிகளின் விவரம் கோருதல் – சார்ந்து

அரசு தொடக்கநிலை வகுப்புகளில் (1முதல் 5வகுப்பு வரை)பராமரிக்க பட வேண்டிய பதிவேடுகள் யாவை?தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்ற தகவல்

தமிழ்நாட்டில் முஹரம் வருகின்றன 11.09.2019 புதன்கிழமை அன்று கொண்டாடப்படும்.


web stats

web stats