முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும், அதன்பின்னர் அதிமுக அரசின் நீண்டகால நிதி அமைச்சராகவும் பணியாற்றி சிறந்த அனுபவமும் ஆற்றலும் தன்னகத்தே பெற்றுள்ள திருமிகு.சி. பொன்னையன் அவர்கள் தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவராக நேற்றையதினம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநிலத் தலைவர் திரு முத்துசாமி அவர்கள் இன்று செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மேலும் திரு . பொன்னையன் அவர்கள் தலைவரிடம் தனது மகிழ்ச்சியையும், தெரிவித்துக் கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
வருகின்ற 17 18 19 ஆகிய தேதிகளில் சென்னையில் ஏதாவது ஒரு நாளில் நேரடியாக திட்டக்குழு துணைத் தலைவரை மாநிலத் தலைவர் முத்துசாமி ஐயா அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் சென்று வாழ்த்துக்களையும் கோரிக்கைகளையும் நேரில் அளிக்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஐயா முத்துசாமிஅவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துக் கொண்டுள்ளார்
No comments:
Post a Comment