பள்ளிக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்ற றிக்கை:
தமிழக அரசின் சத்துணவு திட்டத் தில் பயன்பெறும் மாணவ, மாணவியர் சுகாதார முறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில், அனைத்து பள்ளிகளிலும் காலியாக அல்லது பயன் படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை சீர் செய்து உணவு அருந்தும் கூடங்களாக மாற்றி அமைப்பது தொடர்பாக கடந்த மார்ச் 4-ம் தேதி சமூகநலத் துறை ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.அதன்படி பயன்படாத வகுப்பறை களை சீர் செய்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக மாற்றித் தர ஏதுவாக, அப்பள்ளிகளின் பெயர்ப் பட்டியல் மற்றும் அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களும் விரிவான அறிக்கையாக தயாரித்து, துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment