Labels

rp

Blogging Tips 2017

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம்







தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஐயா செ.முத்துசாமி EXMLC அவர்கள் தலைமையில் 8 11 2020 10:30 மணி அளவில் நாமக்கல் நகரில் டைரி தயாரிப்புக் குழு மற்றும் இயக்க செயல்பாடுகள் குறித்தான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2021 ஆம் ஆண்டில் டைரி காலண்டர் தயாரிப்பு பணிகள் கீழ்க்கண்டவாறு செயல்படுத்த திட்டமிடப்பட்டது 

டைரியில் ஏற்கனவே அச்சடித்து வரும் படங்களுடன் இந்த ஆண்டு நூற்றாண்டு விழா காணும் முன்னாள் குடியரசுத் தலைவர்  மேதகு ஆர் கே நாராயணன் அவர்கள் படத்தை வெளியிடுவது
இந்த ஆண்டு முதல் நமது டைரியில் தமிழக முதல்வர்,கல்வி அமைச்சர் ஆகியோருடன்  சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் படத்தினையும் சேர்த்து வெளியிடுவது 
தேவையற்ற காலவதி ஆகிவிட்ட விவரங்களை எடுத்துவிட்டு ஆசிரியர்களுக்கு தேவையான அரசாணைகள் மற்றும்புதிய விவரங்களை சேர்த்து வெளியிடுவது மாவட்ட பொறுப்பாளர்கள் முகவரிப்பட்டியலினை தொடர்ந்து அம் மாவட்டத்தைச் சேர்ந்த வட்டார பொறுப்பாளர்கள் முகவரி விவரங்களை அச்சிடுவது 
டைரி காலண்டர் விலை கடந்த ஆண்டை போலவே ரூபாய் 200 என்று தொடர்வது 
தனி காலண்டர் விலை 50 தனிடைரி  விலை 150 என முடிவாகியது 
மாவட்டத்திற்கு தேவையான டைரி காலண்டர் தேவைப்பட்டியலை 22-11-2020 க்குள் மாநில அமைப்பிற்கு தெரியப்படுத்துதல்
தேவைப்பட்டியலுக்குண்டான தொகையை மாநில டைரி நிதி க்கான வங்கிக்கணக்கில் நேரடியாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணம் முழுவதும் செலுத்தியவர்களுக்கு சிவகாசியில் இருந்து நேரடியாக டிசம்பர் மாதம் 29ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில்  பார்சல் அனுப்பி வைக்கப்படும்.
இயக்க உறுப்பினர் சேர்க்கை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் 
உறுப்பினர் சந்தாதொகை செலுத்தாதவர்கள் உடன் செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது
இயக்கத்தின் பைலா திருத்தம் செய்து அதன் நகல் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து வட்டார ,மாவட்டக்கிளைகளுக்கு வழங்கப்படும்.
தமிழகத்தில் சட்டசபைத்தேர்தல் வர உள்ள சூழ்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் (வாக்குறுதி) அறிக்கை தயாரிப்பது தொடர்பாக அக்கட்சியின் மாநில பொருளாளர் திரு டி ஆர் பாலு தலைமையில் குழு அமைத்து அதுதொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை மாவட்டங்களில் ஆங்காங்கே நடத்தி வருகிறது .
நம் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள்  மற்றும் மாணவர் நலன் கருதி 20 அம்ச கோரிக்கை பட்டியலைத் தயாரித்து திமு கழகத்தின் மாநில தேர்தல் கருத்துக் கேட்பு குழுவிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கப்பட்டது .
இதே போன்று  நமது கோரிக்கைகள் மற்ற அரசியல்கட்சிகளுக்கு அவைகள் கோரும் போதோ அல்லது தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்போ அனுப்பிவைக்கப்படும்
மாநில அமைப்பு தயாரித்துள்ல கோரிக்கைகளினை  மாவட்ட செயலாளர்கள் மாவட்டத்தில் தங்கள் மாவட்ட லட்டர் பேடில் டைப் செய்து  கோரிக்கைகளை  அரசியல் கட்சிகள் கருத்து கேட்கும்போது வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது .
இயக்கத்தின் பொதுக்குழு குரானா தாக்கம் மிகவும் குறைந்த பிறகு ஜனவரியில் நடத்திக் கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது

ஆசிரியர் பேரணி இதழ் சந்தாக்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் உடனடியாக பேரணி சந்தாக்களை சேர்த்து  முகவரிப்பட்டியலிடன்அனுப்ப மாவட்ட, வட்டாரச்செயலர்களை கேட்டுக்கொள்ளுதல்
வரும் ஆண்டின் துவக்கத்தில் ஆசிரியர் பேரணி இதழை மாத மொருமுறை புத்தக வடிவில் வெளியிட மாநிலத்தலைவர் அய்யா செ.முத்துசாமி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு) திரு.சு.ம பாலகிருஷ்ணன் மாநில பொருளாளர் கே.பி,  ரக்ஷித், ஆசிரியர் பேரணி இணை ஆசிரியர் திரு.வடிவேல், மாநில துணைத்தலைவர் திரு  சாமிநாதன், மாநில இளைஞரணி செயலாளர் நாகராஜன், திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு,ராஜேந்திரன் கரூர் மாவட்ட செயலாளர் திரு பெரியசாமி நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு செல்வகுமார், சேலம் மாவட்ட பொருளாளர் திரு அபுபக்கர்,,நாமக்கல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் திரு கருப்பண்ணன் கரூர் - கடவூர் வட்டாரத்தலைவர் திரு ஞானசேகரன்  ஆகியோருடன், சேலம் கிர்ஜிஸ் பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு  வினோத்குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.
தகவல்
கே.பி.ரக்ஷித்
மாநிலப்பொருளாளர்



 

No comments:

Post a comment