Labels

rp

Blogging Tips 2017

தமிழகத்தில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள் தொடர்பான விபரம் கேட்கப்படவில்லை. பள்ளிகளை மூடும் திட்டம் இல்லை பள்ளிக்கல்வித்துறை விளக்கம்.


தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு 01.04.2020 முதல் 30.06.2020 வரையிலான மூன்று மாதங்களுக்கு AZ கணக்குத் தலைப்பில் நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக் கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் உத்தரவு!!!

Extension of PLI/RPLI premium payment period due for March 2020, April 2020 & May 2020 upto 30.06.2020 without penalty/ default fee

25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவான பள்ளிகளின் பட்டியலை பெற வேண்டாம் என முதலமைச்சர் நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை அறிவிப்பு

முதலமைச்சர் அவர்களின் அலுவலக காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட செய்தியின் அடிப்படையில், 25 மாணவர்களுக்கு குறைவான உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் கேட்டுப் பெற வேண்டாம் என அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும் இனி அவர்கள் இது சார்பாக ஏதும் தகவல் பெற மாட்டார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளிகள் இணைப்பு பற்றிய கவலை வேண்டாம் தக்க சமயத்தில்மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பான  எழுதப்பட்ட வேண்டுகோள் கடிதங்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்ட மைக்கு பதில் நடவடிக்கையாக தமிழக அரசின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்டவொரும்புகிறோம். சரியான தருணத்தில் கோரிக்கை வைத்த மாநிலத் தலைவர் ஐயா செ.முத்துசாமி Ex.MLC அவர்களுக்கு இந்நேரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

25 மாணவர்களுக்கு குறைவான உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல்கோருதல் நடவடிக்கையை கவிட முதல்வருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள் கடிதம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ஐயா முத்துசாமி அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனது ஒரு மாத ஓய்வூதியத்தை வழங்கிய நிகழ்வு நியூஸ்7 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சி


25 மற்றும் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் விதத்தில் கணக்கெடுப்பு பணியினை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தமிழகமுதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள்*கடந்த இரு நாட்களாக அவசரம் அவசரமாக வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கிராமப்புறங்களில் இயங்கும் 25 மற்றும் அதற்கு குறைவான எண்ணிக்கையை கொண்ட மாணவர்கள் பயிலும் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியோடு இணைக்கும் விதத்தில் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம்.

 தமிழகமே ஏன் இந்தியாவே அதற்கும் மேலாக உலக வல்லரசு நாடுகளும் corona எனும் மிக கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு உலக இயல்பான இயக்கமே நின்று விட்ட நிலையில்,

 அனைத்து இடங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,அவர்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கின்ற இந்த தருணத்தில் ,
தமிழக அரசானது கிராமப்புற பகுதியில் உள்ள ஏழைப் பிள்ளைகளின்  கல்விக்கு ஒரே ஆதாரமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளை மூடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  மூலமாக 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளின் பட்டியல் கோரப்பட்டு உள்ளதாக அறிகிறோம் .

இக்கட்டான சூழ்நிலையில் கிராமப்புற விவசாயிகள் மற்றும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்களோடு அவர்களின் பொருளாதாரமும்,வருமானமும் அடியோடு பாதிக்கப்பட்டு இருப்பதாலும்,

மேலும் அவர்கள் இப்பாதிப்பில் இருந்து வெளிவர ஏறக்குறைய ஆறு மாத காலங்கள் அவர்களுக்கு பிடிக்கும் என்பதாலும் 

தற்போது வாழ்வா சாவா என்ற நிலையில் உள்ள ஏழை எளிய மக்களின் கல்வி பெறும் உரிமையில் மண்ணை அள்ளிப் போடும் விதமாக பள்ளிகள் இணைப்புத் திட்டத்தை அரசாங்கம் தற்போது கையில் எடுத்திருப்பது வேடிக்கையாகவும் அதே சமயத்தில் வேதனையாகவும் உள்ளது

 எனவே இந்த நிகழ்வினை தமிழக முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் கவனத்தில் கொண்டு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது

*செ. முத்துசாமி Ex MLC*
மாநில தலைவர் *சு.ம.பாலகிருஷ்ணன்*  மாநில பொதுச் செயலாளர் (பொறுப்பு)
 *கேபி ரக்‌ஷித்* 
மாநில பொருளாளர்.
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.*

🅱️NEWS கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்பொழுது நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ள நிலையில் அந்த பணிகளை சரிகட்ட இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு ஜூன் மாதம் முழுவதும் இந்த ஆண்டிற்கான கோடைவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது👇


தமிழகத்தின் புதிய வரைபடம் - 38 மாவட்டங்கள் உள்ளடக்கியது...


வருமான வரி ரீஃபைண்ட் தொகை - யாருக்கெல்லாம் பொருந்தும் ? - புதிய தகவல்

ஒரு‌நாள் ஊதியப்பிடித்த. விபரத்தினை ஏப்ரல் ஊதியப்பட்டியல் தயாரித்த பின்னர் அனுப்பக் கோரும் திருத்திய செயல்முறைகள்

வரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட அரசு புள்ளிவிவரம் தயாரிப்பு ?? Format avail

*வரும் கல்வியாண்டில் 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூட அரசு புள்ளிவிவரம் தயாரிப்பு ???

25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளின் பட்டியல் மிக விரைவாக பெறப்படுகிறது.


 அப்பள்ளியின் பெயர் மாணவர்களின் எண்ணிக்கை
 மற்றும் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை

அப்பள்ளி மாணவர்களை அருகில் உள்ள பள்ளியில் சேர்க்க ஏதுவாக உள்ள அருகாமைப் பள்ளியின் பெயர் மற்றும் தூரம் ஆகியவற்றை உடனடியாக குறிப்பிட்டு அனுப்பச் சொல்லி தொடக்கக் கல்வி இயக்குனரகம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருப்பதாக தெரியவருகிறது


இது 25 மாணவர்கள் மற்றும் அதற்கு குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூடுவதற்கு வழிவகை செய்யும் என எண்ணப்படுகிறது.

வருமான வரியில் திருப்பி அளிக்க வேண்டிய தொகை ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அதை உடனடியாக அளிக்க உத்தரவு

ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய விவரம் கோருதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


கொரோனா நோய் நிவாரணமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களது ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய ஒப்புதல் தெரிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு , GO No : 41 , 03.04.2020


மே 15 வரை பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம்-மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை

மே 15 வரை பள்ளி கல்லூரிகளை திறக்க வேண்டாம்-மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை

*📍பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறையை மே மாதம் 15ம் தேதி வரை நீட்டிக்குமாறும், மத நிகழ்ச்சிகளுக்கான கட்டுப்பாடுகளை ஒரு மாதம் தொடரவும் மத்திய அமைச்சரவைக் குழு பரிந்துரை செய்துள்ளது.*

*📍21 நாள் ஊரடங்கு உத்தரவு முடிவடைய இன்னும் 7 நாட்கள் எஞ்சியுள்ளன. மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுவரும் நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா , கர்நாடகா,

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஊரடங்கை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.*

எட்டாம் வகுப்பிற்கு முப்பருவ பாடமுறை ரத்து

பள்ளிக்கல்வித்துறை - ரூ.70 கோடி நிதி - அமைச்சர் செங்கோட்டையன்!

கொரோனா தடுப்பு பணிகளுக்காக பள்ளி கல்வி துறை சார்பில் ரூ.70 கோடி நிதியுதவி. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் நிவாரணப் பணிகளுக்கு வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை 38 ஆவது மாவட்டமாக பிரித்து அரசானை வெளியீடு

எம்.பி.க்களின் ஓராண்டு ஊதியத்தில் 30% பிடித்தம்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

கரோனா தொற்று காரணமாக தமிழகம், மகாராஷ்டிரம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், நிதிச் சிக்கன நடவடிக்கையாக, பிரதமர் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓராண்டுக்கான ஊதியத்தில் 30%  தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்களும் தாமாக முன்வந்து ஊதிய பிடித்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் ஊதியம் கரோன தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

ஏப்ரல் 1ம்  தேதி 2020ல் இருந்து இந்த ஊதியம் பிடித்தம் நடைமுறைக்கு வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்.பி.களுக்கான தொகுதி நிதி ஒதுக்கப்படாது என்றும் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்தார்.

web stats

web stats